Header Ads



ரணில் வெளியிட்ட, ரகசிய தகவல்


உலகம் முழுவதும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போது சமகால ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளுக்குள் அத்துமீறி தகவல்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லண்டனில் செயற்படும் கேம்பிரிட்ஜ் அனலடிக்கா நிறுவனம் இந்த மோடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிறுவனம் தன்னையும் சந்திக்க முயற்சித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னை சந்தித்து சேவை வழங்க குறித்த நிறுவனம் முன்வந்ததாகவும், தான் அதனை நிராகரித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை வழங்க தனது விருப்பத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்ததாகவும், அதிஷ்டவசமாக அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்தக்கருத்து பல பொய்களை நிறுவுவதற்கு முன்வைக்கும் மற்றொரு பொய் எனத்தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.