Header Ads



முஸ்லிம்களின், இதயத்தின் கதறல்கள்


-Siththy Humaiza-

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணநிலை எம் அனைவரையும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் தருணம் இது. அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள் என்போர்கூட தங்களது அனுதாபங்களையும், கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவை உதட்டளவிலா அல்லது அரசியல் நோக்கங்களினளவிலா அல்லது தாங்களும் தலைகாட்டுவோம் என்ற கூட்டத்Nதூடு கோவிந்தா என்னும் நிலையா எனப்புரியவில்லை. யானையைப்பற்றிய குறிப்புக்கள் சொன்ன குருடர்களைப்போல் நாமும் இங்கு இதன் பின்னணிகளைப்பற்றி பிரஸ்தாபிக்;க வரவில்லை. மாறாக இதயம் வீழ்ந்து மண்டியிட்டும் கதறலை உங்கள் காதருகில் சேர்க்கவே விரும்புகிறேன்.

பல்வேறு பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அசம்பாவித செயல்கள் விசக்காற்றுப்போல் பரவி எம்மனைவரையும் காவுகொள்வதற்குள் விழித்துக்கொள்ள வேண்டும். அது குறித்து எம் ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்தி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எங்கோ இருப்பவர் தானே என நாம் இருந்துவிடமுடியாது. அதேபோன்று முஸ்லிம்கள்தானே என சிங்களவர்களும், தமிழர்களும் இருந்துவிடமுடியாது. இதே போன்ற துயரை கடந்த கால அனுபவங்களுடாக அனுபவித்தவர்கள் நீங்கள். ஆதன் வலிகளை உணர முடிந்தவர்கள் நீங்கள். தமிழ் சமூகமாகிய நீங்கள் எங்களது வலிகளையும் அதேபோன்று நோக்கி உணர்ந்துகொள்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

தற்போது அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதத்தன்மைக்கு விரோதமான செயற்பாடுகள் எந்நோக்கத்தில் நிறைவேற்றப்படடுக்கொண்டிருக்கிறது? ஆதன் பின்னணி என்ன? இதனை நடாத்துவிக்கும் சக்திகள் எவை? அரசியல் செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்சிகளா? ஏன்பன போன்ற பல கேள்விகள் மனதைக் குடைந்துகொண்டிருக்கின்றன.
நாளாந்தம் உண்டுவரும் கடையில் மாத்திரை எண்ணத்தை  திடீரென்று உட்புகுத்தியதன் நோக்கம் என்ன? ஏன் அங்கு முஸ்லிம்கள் உண்பதில்லையா? அவரகளுக்கு அந்த மாத்திரை வீரியத்தைக்காட்டாதா? சிறு குழுக்களுக்கிடையேதான் அத்தகராறு ஏற்பட்டிருப்பின் எவ்வாறு குறித்த சொற்ப நேரத்திற்குள் அத்தனை அழிவுகள்? பள்ளிவாயில் சுற்றுமதில்கள் காற்றில் சாய்ந்த நாணல்கள்போல் எவ்வாறு குறித்த நேரத்திற்குள் வீம்த்தப்பட்டிருக்கும் திட்டமிடப்பட்ட சதி அல்லாதபடசத்தில்? சிறுபிள்ளைக்குக்கூட எழும் கேள்விகள் அவை நமக்கு எழாமல்போவதற்கு  இலங்கையர் என்ன முட்டாள்களா?! தான் மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு  உலகமே இருட்டு என எண்ணிக்கொள்ளும் பூனையின்; நிலையாயிற்று இதன் பின்னணி சக்திகளின் நிலை.

அம்பாரையில் ஆரம்பித்து கண்டியின் பல ஊர்கள்வரைப் பரவியிருக்கும், பரவிக்கொண்டிருக்கும் விசக்கொடியர்களின் தீவினையை யார் செய்தார்கள் என நாங்கள் கேட்கப்போவதில்லை. மாறாக அவர்களிடம் எங்களின் இதயம் கூறும் செய்திகளை சிந்தனைக்கு கொண்டவர விருப்பப்படுகின்றோம்.

இந்நாடு எங்களது நாடு எங்களது நாடு என மார்தட்டிக்கொள்ளும் பெரும் இனமே, அதன் தலைவர்களாக கூறிக்கொள்ளும் பெரும் தலைவர்களே இந்நாடு உங்களுடையதாயின் இந்நாட்டை முன்னேற்றும் திட்டங்கள் குறித்தல்லவா உங்களது சிந்தனை சென்றிருக்கு வேண்டும். இந்நாட்டின் நற்பெயரை பாதுகாக்கும் முறை இதுதானா, சர்வதேசம்வரை நாட்டைப் புகழ்பூக்க செய்யும் வழிமுறையும் இதுதானா, நீங்கள் உண்மையாக உங்களது நாடு என சிந்தித்திருப்பின்  இவடவாறான செயலை, குரோதத்தை அரங்கேற்றுவீர்களா, அதனை எண்ணெய் ஊற்றி இன்னும் இன்னும் எரியவிட்டிருப்பீர்களா? மாறாக உங்களது இனங்களை ஆதரிக்கும் பண்பையல்லவா வளர்திருப்பீர்கள், சகவாழ்வை விரும்புபவர்கள் என்னும் முன்மாதிரி நிலையையல்லவா சர்வதேசத்திற்கு காட்டியிருப்பீர்கள். அங்கணம் எவ்வாறு நீங்கள் தேசப்பற்றாளர்கள் ஆவீர்கள், எங்கணம் நீங்களே அழித்துக்கொணடுட உங்களது நாடு என்பீர்கள்?!

இதனை அரங்கேற்றுபவரகள் அரசியல் தலைவர்களாயின், ஆசியாவின் ஆச்சர்யம் இதுதானா? அபிவிருத்தியின் உயர் சுட்டியும் சிறுபான்மையினர் அழிக்கப்படுவதா? சிறுபான்மையினத்தை சுத்திகரித்துவிட்டால் நீங்கள் ஆசியாவின் ஆச்சர்யத்தை அடைந்தவிடுவீர்களா? அதியுயர் பொருளாதார வருமானத்தையும் கண்டவிடுவீர்களா? ஐ.நா வின் கைதட்டல்களையும் பெற்றுவிடுவீர்களா?
நிச்சயமாக முஸ்லிம் வீட்டை அண்டிவாழும் எம் சிங்கள சகோதரரோ, எம் அலுவலகத்தில் எங்களுடன் பணியாற்றும் சிங்கள சகோதரரோ இதனைச் செய்ய விரும்பவேமாட்டார். .அழகிய உணர்வுகொண்ட எம் அயலவார்கள் அவர்கள். அவர்களது கிரிபத்தை நாம் உண்டும், எங்களது றம்சானை அவர்கள் கொண்டாடியும் வந்த எம் உணர்வுகளில் கலந்திட்ட உறவுகள் அவர்கள்.  சுனாமியி;னபோது எமக்கு ஆடையையும் உணவையும் தந்து எங்களை ஆசுவாசப்படுத்திய உறவுகள் அவர்கள் இன்னொரு அனர்த்தத்தை நிச்சயம் விளைத்திருக்கமாட்டார்கள். உங்கள் குரோதத்தை அவர்களிடம் திணித்து எங்களைப்பற்றியிருக்கும் அவர்களது கரங்களை அறுத்துவிடாதீர்கள். ஒருவரையொருவர் கட்டித்தழுவும் எங்களை பார்க்கNh ஒருவருக்கு ஒருவர் அச்சமுறு நிலையைக் கொண்டுவந்துவிடாதீர்கள்

தேசப்பற்றை வன்முறையாகக் கொள்ளும் தேசப்பற்றாளர்களே உங்களுக்கு தெரியுமா எங்களது பண்டிகைகளை கொண்டாட நாங்கள் உங்களது கடைகளுக்கு வரும்போது நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை இது உங்களது இனத்தவரது என்று. உங்களது ஆடைத்தொழிற்சாலை எங்களது பிரதேசத்தில் அமையும்போதும், அதற்கு எங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும்போதும்கூட எண்ணியதில்லையே. உங்களது பிள்ளை விளையாட்டில் உயரந்து நின்றபோது அவர்களை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்டவர்கள் நாங்கள். மாறாக எங்களது மகனை கொலை செய்தவர்கள் நீங்கள். அதற்காகாகூட நாங்கள் கிழர்ந்தெழவில்லை. பொறுமையேகொண்டோம். இப்பேததைய எங்களது எதிர்ப்புக்களை சாத்வீக வழியில் காட்டக்கூட முடியாதவாறு சட்டத்திற்கு கட்டுப்பட்டுநிற்பவர்கள் நாங்கள். 

நீங்கள் நினைப்பதுபோன்று இந்நாட்டை யுத்தகளமாக்க ஒருபோதும் நாம் எண்ணியதுகூட இல்லை.அதற்காக நாங்கள் கையிழந்தவரகள் என்பதும் அர்த்தமில்லையே. துன்பங்களை பொறுமையால் வென்றவரகள் நாங்கள். இப்போது நீங்கள் உடைத்துக்கொண்டிருக்கும் எங்களது பள்ளிவாயில்களில் உங்களுக்கும் சேர்த்தே துவா செய்துகொண்டிருந்தோம் இறiவா எங்களத நாட்டை சாந்தி மையமாக்கி தா, எங்களது நாட்டை செல்வச்செழிகப்பாக்கித்தாவென்று. அதனை நீங்கள் உணர்ந்திருந்தால் இத்தனையும் நிகழ்த்துவீர்களா.

எங்களால் கல்வியில் வெல்ல முடிந்திருக்கிறது, எங்களால் வர்த்தகத்தில், பண்பாட்டில், சமாதானத்தில் எல்லாம் வெல்ல முடிந்திருக்pறது. உங்களாலும் முடியுமென்றால் நீங்களும் வெல்ல வேண்டும் என்ற வெறியிருந்தால் வாருங்கள் போட்டிபோட்டுக்கொண்டு கல்வியில், விளையாட்டில் வர்த்தகத்தில் இறங்குவோம். எங்களுக்கும் சமவாய்ப்பை தந்து போட்டியில் வெற்றியைநோக்குங்கள். 

மாறாக யாதொன்றும் செய்யாத எம் பள்ளிகளை, எம் கடைகளை, எம் சொத்துக்களை கொமுத்தாதீர்கள். எம் வியர்வை சிந்தி பெற்றதை கண்ணீர் விட்டு இழக்கவிடாதீர்கள். எம் குழந்தைகளுடன் வீட்டிற்குள் சிறைவைக்காதீர்கள். வெளியேறிச்சென்று எம் சிங்கள சகோதரனிடம் இனிப்புகள் பகிர்ந்த கைகைளைப்பற்றி கதைகளைப்பேச வழிவிடுங்கள். எம் சகோதரனும் யாதுமறியாது திகைத்;து நின்று எமக்காய் காத்திருப்பான்.

No comments

Powered by Blogger.