Header Ads



கண்டி வன்முறைகளின் பின்னணியில் அரசியல்வாதிகள் - ராஜித

கண்டியில் சில பிரதேசங்களில் நடந்த பதற்றமான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று -07- நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவரது செயலாளர், இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

கண்டி சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பின்னணியில் இருக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. எதிர்காலத்தில் மேலும் தகவல்கள் தெரியவரும்.

இதற்கு அமைய இனவாத மோதல்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. அவசர கால சட்டம் இவர்கள் மீது பாயவேண்டும்.
    20 வருட சிறை வழங்கப்படவேண்டும்

    ReplyDelete
  2. This is a Consipiracy of Mahinda Terrorist group.

    ReplyDelete
  3. சட்டத்தை அமுல்படுத்லாமே பிரபாகரனை . Jvp கலவரத்தை அடக்கிய இலங்கை இரானுவம் எங்கே

    ReplyDelete
  4. சட்டத்தை அமுல்படுத்லாமே பிரபாகரனை . Jvp கலவரத்தை அடக்கிய இலங்கை இரானுவம் எங்கே

    ReplyDelete

Powered by Blogger.