March 09, 2018

முஸ்லிம் அடிப்படைவாதம் உள்ளது, அதனை கட்டுப்படுத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களில் உண்மையான பின்னணி என்னவென்பதை கண்டறிய உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இரண்டு தரப்பின் தவறுகளையும் தண்டிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நிலைமைகளை கட்டுப்படுத்தவே சமூக தளங்கள் முடக்கப்பட்டது, விரைவில் அனைத்தும் வழமைக்கு வந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று -09- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சின் வணிக கப்பற் தொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  அவர் மேலும் கூறுகையில், 

அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களை வைத்து இன்று நாட்டில் பல்வேறு கருத்து மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இனவாதம் என்ற கருத்துகளை பரப்பி சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் மனங்களில் பயத்தினையும் சந்தேகத்தினையும் பரப்பப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படவிருந்தது. இதனால் தான் கண்டி சம்பவத்தை அடுத்து நாம் உடனடியாக சமூக தளங்களை முடக்க தீர்மானம் எடுத்தோம். இந்த நகர்வு காரணமாக நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. 

எவ்வாறு இருப்பினும் இந்த சம்பவங்கள் தூண்டுதலில் இடம்பெற்று வருகின்றது. சிங்கள இனவாத அமைப்புகளும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் உள்ளன. ஆகவே இவற்றின் பின்னணியினை அறியவும் உண்மைகளை கண்டறியவும் உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்போம். ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் குற்றவாளிகளை கண்டறிவோம். சிங்கள இளைஞன் ஒருவனை தாக்கிய சம்பவம் தான் காரணம் என்றாலும் அதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது சிங்களவரா, முஸ்லிமா என்ற பேதத்திற்கு அப்பால் குற்றவாளியை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். 

இந்த நாட்டில் 30 ஆண்டுகால யுத்ததம் நிலவியது அதில் பயங்கரவாதம் தோற்கடிக்க பட்டது. அதன் பின்னர் தமிழ் அடிப்படைவாத செயற்பாடுகள் பாரிய அளவில் குறைவடைந்துவிட்டது. இன்று தமிழ் சிங்கள முரண்பாடுகள் என ஒன்றும் இல்லை. ஒரு சில சம்பவங்கள் இருந்த போதிலும் பாரிய அளவில் முரண்பாடுகள் ஏற்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதம் ஒன்று உள்ளது. அதனை நாம் மறுக்கவில்லை. ஆகவே  அதனையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும். வெறுமனே ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சுமத்திவது ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு தரப்பினர் மீதும் உள்ள குற்றங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். 

முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கையின் வடக்கில் இடம்பெற்றதாக கூறி அதனை அரசியலாக மாற்றி இனவாதம் கக்கும் அரசியல் தலைமைகளும் இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் இந்த காணொளியை பதிவேற்றி சிங்கள மக்கள் மத்தியில் பரப்பியதையும் நாம் அறிவோம். முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் இனவாதம் சகல தரப்பினாலும் பரப்பப்பட்டது. இனவாதம் எரிபொருளாக ஊற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறிய தீக்குச்சி பத்தவைக்கப்பட்டால் கூட தீயாக பரவி முழு சமூகத்தையும் அழித்துவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே முன்னைய ஆட்சியின் தவறுகள் இன்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. 

இளைஞர் சமுதாயம் இணையதளம், சமூக தளங்களில் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர். ஆகவே இளம் சமுதாயம் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். நிலைமைகளை கட்டுப்படுத்த தற்காலிகமாக சமூக தளங்கள் சிலவற்றை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெரும்பாலும் நாளைய தினம் அனைத்து தளங்களும் வழமைக்கு வந்துவிடும். எனினும் இனியும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். ஒரு சிலர் தமது தேவைக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு ஒட்டமொத்த மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். 

17 கருத்துரைகள்:

நீ எதனய் இஸ்லாமிய அடிப்படய் வாதம் என்கிறாய் புரியல்லேய ! இஸ்லாமிய மக்கள் தங்கள் மத விதிகளய்பின்பற்றி நடப்பதயயா..?

HARSHA IF YOU GUYS ARE REALLY CARING YOU WOULD HAVE COME TO THE STREET WITH YOUR TEAM TO PROTECT MUSLIMS FROM MOBS, BUT YOU JUST TWITTED WHILW HAVING A COOL COFFEE AT HOME.

I thought he is educated, all are same. Precident and PM also said small group of people in the majority community is involved in this activity. But he added some things not true to his speech. Because he is a like o/ l passed politician .

தற்போதைய பிரச்சினைகள் பற்றிய உண்மையான தன்மையை விளங்காத இந்த கலாநிதி, பிரச்சினைக்கான நீதியை திசைதிருப்ப இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி பீற்றிப் பேசி பாராளுமன்றத்தின் கவனத்தை வேறொரு திசையில் திருப்ப முயற்சி செய்துள்ளார்.

இவரும் தற்போது சிங்கள இனவாதிகளினால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்

Please dont talk Bullshits MR harsha

முஸ்லிம்கள் மீது ஒரு மாபெரும்l வன்முறையையும், சொத்துக்கள் அழிவுகளையும், ஏட்படுத்திய இந்த நிகழ்வை, மிகவும் நொதுமைப்படுத்தும், அதன் பாரதூரத்தையும் இதில் உள்ள அடிப்படை விடயங்களை திசை திருப்பவும் இவர்கள் முன்வைக்கும் முஸ்லீம் அடிப்படை வாதம்(இப்படியான ஒரு விடயம் இலங்கை முஸ்லிம்களிடத்தில் இல்லை, BBS போல ) என்ற விடயம் தெளிவு படுத்தப் பட வேண்டும்.

ஜிந்தோட்ட, அம்பாறை, கண்டி வன்முறைகள் திட்ட மிட்ட அடிப்படையில் நடந்தேறிய விடயங்கள் ஆகும். இவை BBS, சம்பிக்க ( ஹெல உறுமய), தயாசிறி (UNP)...இன்னும்சில சிங்கள துவேஷ அமைப்புக்கள் என்பது கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முஸ்லீம் அரசியல் வாதிகள் அழுத்தம் கொடுப்பார்களா??

சிங்கள போலீசும், சிங்கள பாதுகாப்பு படையும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அழுத்தம் கொடுப்பார்களா முஸ்லீம் அரசியல் வாதிகளும், சமூக ஆர்வலர்களும், வெகுஜன-மீடியா இக்களும்.

முஸ்லிம்கள் தங்களது அடிப்படையான பாதுகாப்பை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும். இந்த விடயம் எப்படி செய்ய முடியும் என்பது அவசரமாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டு செயல் படுத்தப்பட வேண்டும்.

யார் இனவாதி

Sorry to say Mr Har
I thought you are a Professor and well educated gentlemen
BUT
I can guess your Knowledge
It seems to be below GCE O/L

You cannot implement the Law & Order in the country but talking rubbish.

Hai minister,, can you tell any place Muslims attack any house or tample or innocscent sinhale people? Do not try to hide elephant in small egg.

Muslim hat enough and still we respect the rules of government, we have lost houses, shopes and our worshiping places for not reason except you jeleous or any onece political agenta.

Why are you behind us, after all we are still not demanding or asking for anything from you. Rather we have served this country in many ways. We are not foreigner but like you all are citizens of this land.

Please stop your hate statments in cunning way. stop racism toward us.. we will continue to keep peaceful existance in this land.

Let us develop this land together and not divided. Please do not think to make this land another BURMA.

Who is this foolish minister
He doesn’t know about Islam and it’s practice
He has copied some said
Idiot fellow

O Harsha! Mind your words. We Lankan Muslims till following the country rules... We never rise weapons

இவனும் ஒரு இனவாதி

இனம் இனத்துடன் தான் சேறும்.

Post a Comment