Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடர்பில், நீதி விசாரணை தேவை

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் அதிருப்தியை வௌியிட்டிருந்தார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை தகர்த்துவிடும் என்று அவர் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட அமைச்சர் மனோ கணேசன், அம்பாறை இனக்கலவரத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மையினத்தவர் குற்றம் சாட்டுவது போன்று உணவில் ஏதேனும் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து சுகாதாரத் துறை உதவியுடன் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே தவிர வன்முறை அணுகுமுறைகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று உரத்த குரலில் அமைச்சர் மனோ கணேசன் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

3 comments:

  1. இவரைப்போன்ற நேர்மையான, தஹ்ரியமான அரசியல்வாதிகள் இருக்குமேயானால் நமது எப்போவோ சிங்கப்பூர் போன்றாகிருக்கும்.

    ReplyDelete
  2. மனோ ஐயா நீங்கள் தான் பாராளுமன்றத்தில் உள்ள நேர்மையான அரசியல்வாதி உங்களைப் போன்று ஏனைய அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் எமது நாடு எப்போதோ சுபீட்சம் அடைந்திருக்கும் உங்கள் துணிவிற்கும் சேவைக்கும் நன்றி

    ReplyDelete
  3. @ noorul & mohamed, சும்மா புளுகாதீர்கள். அப்போ ஏன் நீங்கள் மனோ வின் கட்சிக்கு வாக்களிப்பதில்லை?

    ReplyDelete

Powered by Blogger.