March 05, 2018

சிங்களவன் எப்போது, அடிப்பதை நிறுத்துவான்..?

அலுத்கம, கிந்தொட்ட, அம்பாறையில் கலவரம் நடந்தபோது எங்களுக்கு அது வேறு ஊர் பிரச்சினையாகவே பட்டது. 

அதே பிரச்சினை எமது வீட்டு கதவை தட்டும்போது ...?

நாளை எங்கு வேணாலும் இன்னொரு ரூபத்தில் இந்த இனவாத பிரச்சினை உருவாகலாம் இல்லை உருவாக்கப்படலாம், பிரச்சினை உருவாக ஒரு சிங்கள நபர்  தாக்கப்படணும் என்பதல்ல, 

காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகத்தான் அந்த குடிகாரர்களின் தாக்குதலும் அதையொட்டி நடக்கும் வன்முறைகளும்,

முந்தி சிங்கள பெருநாள் சீசன் என்டா ஃபெஷன் பக், நோலிமிட் என்று தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டிருந்தது இப்ப அவங்க ப்ளேன் B ய யூஸ் பண்றாங்க,

இப்ப ஒரு வீடியோ பார்த்தேன், மஹசொன் பலகாய அமித் வீரசிங்க திகன டவுன்ல நடந்து போறான், திகன டவுன்ல 20 சிங்கள கடைகள் மட்டும் இருக்குதாம், முஸ்லிம் மயமாக்கப்பட்டதற்கு சிங்களவர்களின் அசிரத்தையே காரணம் என்பதோடு இந்த நிலமையை மாற்ற வேண்டும் என்கிறான்.

மறுபக்கத்தில் இனவாதியான அம்பிடிய சுமனதேரர் மற்றும்  ஞானசாரயும் விசிட் பண்ணியுள்ளார்கள்!

இது isolated incident என்று கடந்து போய்விட முடியாது, 
மாறாக இது pre planed and coordinated riot அதாவது சித்திரை புத்தாண்டு வியாபாரத்தை முஸ்லிம்கள் செய்வதை தடுக்குமுகமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட வன்செயல்! 

இந்த நாசகார செயல் திகனயில் நடந்திருக்காவிட்டால் வேறு எங்காவது முஸ்லிம் டவுனில் நடந்திருக்கும்.

மற்றது முக்கியமானது மத்திய வங்கி ஊழல், ஐதேக உட்பூசல்,ரணில் எதிர்ப்பு? இப்ப யாராவது பேசுறாங்களா? பேசுவாங்களா? 

தன்சல கொடுத்தோம், அடிச்சான்கள்!

மதநல்லிணக்கம் என்ற பேரில் பள்ளிக்குள்ள ஹாமுதுருகளை கொண்டு வந்தோம், அப்பவும் அடிச்சான்கள். 

இதுவரை எதுக்குமே திருப்பி அடிக்காமல் குனூத் ஓதினோம்,அடி பணிந்தோம் ...
இன்னும் அடிக்கிறான்கள்.

இனி என்ன செய்ய? தொடர்ந்து நோன்பு வைக்கிறதா? அப்பவும் அடிப்பான்கள்! 

இன்னும் ரெண்டு மூனு ஜெனரேஷனுக்கு அடிபடுவோம் பரவல்லயா?

Shaheed

2 கருத்துரைகள்:

Shaheed well said ! We have to stop fighting with one another. Stop dividing ourself as Jamaths, stop running away or keep on forgiving them or not fighting back !
When they know Muslims will have the upper hand they bring forces to protect their people. All of us record all these.
Shop owners should install CCTV.
Don't trust any politicians.
It's Allah who helps us like he did in badr war
பாடம் : 40 கோழைத்தனத்திலிருந்தும் சோம்ப-லிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது.
6369. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். Sahih bukari


அன்புள்ள இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களே, நான் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களில் சற்று அவதானம் செலுத்துங்கள், உங்களது நேர்மையான விமர்சனம் வரவேற்கப்படுகின்றது.

"மிக சிறிய அளவிலான இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்கள் சிங்களவர்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட கூடியவாறு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றது, , காரணம் இலங்கையில் சிங்களவர்களின் பிறப்பு வீதத்தை விட முஸ்லிம்களின் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது, இதனால் சிங்களவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது"
--சம்பிக்க ரணவக்க--

தர்கா ரீதியாக இதனை என்னால், அல்லது உங்களால் மறுக்க முடியும், ஆனால், தற்போதைய இலங்கை நிலைமையை வைத்து பார்க்கும்போது இவர் கூறியதில் பெரிதாக தவறை நான் காணவில்லை, இந்த உண்மைத்தன்மையை எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் தனிப்பட்ட குடிகார முஸ்லீம் நபர்களினால் தாக்கப்பட்டதால் உயிரிழந்த சிங்கள சகோதரருக்காக ஒரு மாகாணத்தில் இருக்கும் ஒரு சமூகத்தையே தாக்கி கடைத்தனம் புரிய சிங்களவர்களுக்கு எவ்வாறு மனம் வந்ததது? இது கண்டியில் இருந்து நூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மன்னபிடியாவில் எவ்வாறு பிரதிபலித்தது,

பள்ளிகவாசல்களும் முஸ்லீம் கடைகளுக்கும் தாக்குதல் நடத்துவது என்பது எதோ பழிதீர்க்க செய்த காரியமாகவே கருதப்பட வேண்டும், அவர்களின் உள்காயத்துக்கு மருந்தாகவே நினைக்கின்றனர். அதற்க்கு ஒரு சாட்டாகத்தான் இந்த சிங்கள நண்பரின் மரணத்தை எடுத்துக்கொண்டனர், அதுவும் சம்பந்தப்பட்டவர்கள் கூட்டம் நடத்தி நஷ்ட ஈடு வழங்கப்படும், மேலும் வழங்க உத்தரவாதம் வழங்கிய பின்பும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்பட்டு தாக்குதல்களை வலிந்து செய்திருக்கின்றனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு பிரிவும் இவர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர், ஏன் அவர்களும் அதே இனம் தான். அம்பாறையில் வீம்புக்கு காரணத்தை உருவாக்கி கொண்டார்கள். எங்கோ புகைகின்றது, அந்த புகையைத்தான் சம்பிக்க ரணவக்க சொல்லி இருக்கின்றார்.

இவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று சொல்லுவது என்ன என்று முஸ்லிம்களாகிய எமக்கு புரியா விட்டாலும், காபிர்களாகிய அவர்களுக்கு நன்றாகவே தெரிகின்றது, தொப்பி, தாடி, ஜுப்பா உடன் இருப்பவர்களைத்தான் இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று கூறுகின்றனர். அது பிழை என்று எவ்வளவு சொன்னாலும் அவர்களால் அதை அல்லாஹ்வின் நாட்டம் இன்றி உணர்ந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகளில் இருந்தும் மாற்றம் ஏற்படவேண்டுமேயானால் எமது முஸ்லிம்களின் நடவடிக்கைகளில், விசேடமாக, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் தவிர்ந்த இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் தெளிவான மாற்றம் தேவை விசேடமாக, எமது இஸ்லாமிய பண்பாட்டுடன் கூடிய நடை உடைகளில் மாற்றம் தேவை, தொப்பி, தாடி, ஜுப்பா இவைகள் அனைத்தும் சுன்னத்தானவைகளே, விட்டாலும் பாவமில்லை, ஈமானில் உறுதி இருப்பது அதுவே முக்கியம். ஐவேளை தொழுகையும், ஏனைய மார்க்க கடமைகளும் அதுவே முக்கியம். சவூதி அரேபிய பெண்களின் உடைகள் இலங்கைக்கு பொருத்தமற்றதாகவே என்னால் சொல்ல முடியும், இன்று சவூதி அரேபியாவிலேயே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் ஆண்களும் பெண்களும் சவூதி அரேபிய உடை நடை முறையை பின்பற்றவில்லை

உயிர் வாழ இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத உணவை உண்டுதான் வாழ வேண்டுமென்றால் அதையும் உண்ணுமாறு சொல்லியுள்ளது இஸ்லாம், இது இன்று இலங்கைக்கு சற்று வித்தியாசமாக பொருந்தும் என்றுதான் நினைக்கின்றேன்.

Post a Comment