Header Ads



குமாரசிங்கவின் உறவினர், வெளியிட்டுள்ள தகவல்

கண்டியில் பெரும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட உயிரிழந்த சிங்கள சாரதி தொடர்பில் அவரது உறவினர் ஒருவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலத்திற்கமைய தாக்குதலுக்குள்ளான குமாரசிங்க, அதிகாலை ஒரு மணியளவில் என்னை சந்திக்க வந்தார்.

இதன்போது தன்னை சிலர் தாக்கியதாக தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் காயம் ஒன்றை அவதானிக்க முடிந்ததாக உறவினர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு நான் ஆலோசனை வழங்கிய போதிலும் குமாரசிங்க அதனை நிராகரிததார்.

என்னை சந்தித்த பின்னர் தான் ஓட்டி வந்த லொரியின் உதவியாளர் மற்றும் இன்னுமொரு நபருடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்கிருந்து சென்றவர் அதிகாலை 2 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தான் தீவிர நிலைக்கு செல்வதாக குறிப்பிட்டார். உடனடியாக அங்கு சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன்.

எனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்து விட்டார் என உறவினர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த குமாரசிங்கவை அவர் வேலை செய்யும் எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகிலேயே சிலர் தாக்கியுள்ளனர். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு அங்கிருந்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

4 comments:

  1. பாவம் , ஈவு இறக்கம் இன்றி இப்படி பட்ட ஏழையின் மரணத்திற்கு காரணமான அந்த நாலு அயோகியங்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் .அல்லாஹ்வையும் குரானையும் தலையில் தூக்கி ஆடும் முஸ்லிம்கள் இப்படி பட்ட பயங்கர வாதிகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி கொடுக்க தவறியதன் விளைவு தான் இது.

    ReplyDelete
  2. Nega ltte nalla panupaka solikoduthinkal. Athu polava alla vithiyava kondavanukaluku solikoduthinkal athu polava?

    ReplyDelete
  3. உண்மை வளிச்சத்துக்கு வராத வரை தீர்வு கூர முடியாது.

    ReplyDelete
  4. குற்றச்சாட்டு உன்மையென நிறூபிக்கப் படுமானால் அதி உச்ச தண்டனையான மரணதண்டனையை நால்வருக்கும் நீதிமன்றம் வழங்க வேண்டும்.என்பதே எமது அவா.


    அனுசான் போன்ற சகோதரர்கள் முஸ்லீங்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இந் நால்வரின் செயலுக்கும் குர்ஆனையும்,ஹதீஸையும், முஸ்லீங்களையும் விமர்சிப்பதை ஏற்க முடியாது. போதையில் இருப்பவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்.இதுதான் இஸ்லாமியச் சட்டம்,மது அருந்துபவர்களுக்கு என்ன தண்டனை இங்கு கொடுக்க வேண்டும் இறைவனிடத்தில் என்ன தண்டனை கொடுக்கப் படும் என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் ஆனாலும் அதை புறக்கனித்தது இஸ்லாத்தின் தவரல்ல அது அவர்களின் தவறு.உதாரணத்திற்கு புலிகள் தொழுகையில் இருந்த,தூக்கத்தில் இருந்த அப்பாவிகளை வகை தொகை இன்றி கொலை செய்தார்கள். இவ்வீணச் செயலுக்கு இந்து சமயமோ இந்துக்களோ பொறுப்பு ஏற்பது எங்கனம்.இனி மேலாவது இவர்கள் குரோதப் பார்வையை விடுத்து நடு நிலையாக பார்க்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.