March 15, 2018

"சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால், எரிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிவாசல்களை இடிக்காதீர்கள்"


க‌ண்டி மாவ‌ட்ட‌த்தில் சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் அர‌ச‌ ப‌டை ஆத‌ர‌வுட‌ன் எரிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிக‌ளை இடித்து விட்டு அவ்விட‌த்தில் புதிய‌ ப‌ள்ளிக‌ளை க‌ட்டுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் உடைக்க‌ப்ப‌ட்ட‌ எந்த‌வொரு ப‌ள்ளிவாய‌லும் அர‌சாங்க‌த்தினால் த‌விர‌ வேறு யாராலும் திருத்த‌ப்ப‌ட‌க்கூடாது என்ப‌தே எம‌து நிலைப்பாடாகும். இந்நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் ச‌மூக‌மும் இருப்ப‌து கால‌த்தின் அவ‌சிய‌மாகும்.

 அவை அப்ப‌டியே இருக்க‌ விடுவ‌த‌ன் மூல‌மே ப‌ள்ளி உடைப்புக்கு துணை போன‌ ஐ தே க‌ த‌லைமையிலான‌ அர‌சுக்கும், இல‌ங்கையின் சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இன‌வாத‌த்தின் அவ‌மான‌ சின்ன‌மாக‌வும் இந்த‌ எருயூட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிக‌ள் இருக்கும். 

அது ம‌ட்டுமல்லாம‌ல் இந்த‌ தேச‌த்தின் எதிர் கால‌ ப‌ர‌ம்ப‌ரைக்கும் ந‌ம் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதியை காட்டுவ‌தாக‌ அமையும் என்ப‌துட‌ன் எதிர் கால‌த்திலும் மீண்டும் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிக‌ள் எரியூட்ட‌ப்ப‌டுவ‌தை ம‌னோரீதியாக‌ த‌டுக்க‌க்கூடிய‌தாக‌வும் இருக்கும்.

காத்தான்குடியில் புலிக‌ளால் தொழுகையாளிக‌ள் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளியின்  துப்பாக்கி குண்டின் அடையாள‌த்தை அம்ம‌க்க‌ள் இன்ன‌மும் அப்ப‌டியே வைத்துள்ளார்க‌ள் என்ற‌ தூர‌நோக்கை க‌ண்டி முஸ்லிம்க‌ளும் புரிய‌ வேண்டும்.

அதே போல் க‌ண்டியில் தாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ளை அர‌சு முழுமையாக‌ திருத்தாத‌ ப‌ட்ச‌த்தில் அவ்வாறே வைத்திருப்ப‌த‌ன் மூலம் இல‌ங்கைக்கு வ‌ரும் வெளிநாட்டின‌ரும் ந‌ம்மீது மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ அநீதிக‌ளை காண‌ முடியும். அர‌சின் கையாலாகா த‌ன‌த்தையும் புரிய‌ முடியும்.

இந்த‌ நிலையில் அதே ப‌ள்ளிக‌ளை அப்ப‌டியே இருக்க‌ வேறு புதிய‌ ப‌ள்ளிக‌ளை க‌ட்டிக்கொள்ள‌லாம். அவ‌ற்றை பிர‌தான‌ வீதியில் க‌ட்டாம‌ல் ஊருக்குள் க‌ட்டுவ‌து சிற‌ந்த‌தாகும்.

3 கருத்துரைகள்:

உப்பு மா கட்சி தலைவரே வணக்கம்,

இவளவு நாளாக எங்கே சென்றிருந்தீர்கர்கள் ஒரு அறிக்கையையும் காண முடியலையே. இப்பொழுது எல்லாம் ஓய்ந்த பின் மீண்டும் உங்களுடைய இனவாத சிந்தனையை இளம் பருவத்தினர் மீது கட்டவிழ்த்தி வரும் காலத்திலும் உங்கள் இனத்துக்கு நீங்களே துரோகம் இழைக்க போகிண்றீர்கள். மேலும் அந்த காத்தான்குடி பள்ளிவாசலையும் புனர் நிர்மாணம் செய்தால் கிழக்கில் வேரூண்றி இருக்கின்ற அரபு நகல் அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கலாம்.

Ulama Katchi is 100% right, there is another reason, that if the mosques removed and reconstructed, they (young generation) will later say all mosques in that area were newly built, so it is good for all not to be reconstructed, it is best of best to arrange new places for prayer. if possible it is better to pray in open places to show our Non Muslim brother what were we doing inside the mosques.

இவன் சந்திரபாலுக்கு இறைவன் மாட்டு மூளையை வைத்துப் படைத்துவிட்டான் போலும்.

Post a Comment