Header Ads



முஸ்லிம்களை எம்மால், காப்பாற்ற முடியவில்லை - அஜித் பெரேரா

திகன பகுதியில் நேற்று மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சுட்டடிக்காட்டினார்.

நேற்று மாலை ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கூட்டத்திற்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆளும் தரப்பு எம்.பி.களிடம் திகன பகுதியில் இடம்பெரும் வன்முறை தாக்குதல்கள் குறித்து தெரிவித்து கவலை வெளியிட்டார். அத்துடன், தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம்பெற்ற சம்பவம் தற்போது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இதனை அரசியல் ரீதியாக தாமரைமொட்டுக்காரர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். நிலைமை மிகவும் பாரதூராமக சென்றுள்ளது. நாங்கள் வன்முறைக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

இதன்போது, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல விடயம் குறித்து விபரித்ததுடன், கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

பின்னர், எழுந்து தனக்கு ஐந்து நிமிடம் கருத்து தெரிவிக்க அவகாசம் தர வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

இதன்போது பிரதமரால் சந்தர்பம் அளிக்கப்பட்டது தனது கருத்துக்களை மிகவும் கரசாரமாக முன்வைத்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி., நான் கடந்த ஒன்றரை வருடங்களாக இனவாதிகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வந்தேன். நீங்களும், ஜனாதிபதியும் எனது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. இன்று இனவாதம் தலைக்குமேல் போய்விட்டது. இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் பல வழக்குகளை தாக்கள் செய்திருக்கிறேன். பொலிசில் முறைப்பாடளித்திருக்கிறேன். எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் விளைவு தற்போது பாரதூரமாகியிருக்கிறது. 

கண்டியிலிருக்கும் மகாசேன் பலகாய உறுப்பினர் பற்றி பல முறை நான் எடுத்துறைத்திருக்கிறேன். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் படி கூறியிருக்கிறேன். பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக முறைப்பாடளித்திருக்கின்றனர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எம்மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.

தற்போது கண்டியில் ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அங்கு தாக்குதல்கள் நடந்தவன்னமே இருக்கின்றன. நிலை கட்டுப்படுத்தப்படவில்லை என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டது. 

பொலிஸ்மா அதிபர், மற்றும் மத்திய மாகாண பொலிஸ்மா அதிபர் ஆகியோரை தொடர்புகொண்டார் பிரதமர், நிலைமை சுமுகமாக இருப்பதாகவும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்பினர் குறிப்பிட்டனர்.

இதனை மறுத்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி. அங்கிருந்து பல அழைப்புகள் எனது தொலைபேசிக்கு வருகின்றது. 'எங்களுக்கு தாக்குகின்றனர். எங்கள் வீடு எரியூட்டப்படுகின்றது. எமது வர்தக நிலையத்தை தாக்குகின்றனர். எங்கள் வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்துகின்றனர்' என்றெல்லாம் கூறுகின்றனர். எனவே, இன்னும் நிலைமை சீராக்கப்படவ்லை என்றார்.

இதன்போது எழுந்த களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் பி. பெரேரா, முஜீபுர் ரஹ்மான் எம்.பி கூறுவது முற்றிலும் உண்மையே. அவர் பல முறை இனவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிநின்றார். அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

எமக்கு முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்திருந்தனர். அவர்கள் ஆபத்தில் இருக்கும்போது எம்மால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்வங்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஐந்து சிங்கள அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை நியமித்து அங்கு சென்று நிலைமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.