Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியை, அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றனர் - ரவி

தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஒரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்வதாக கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன குழுவின் ஊடாக மக்கள் ஆணையை பெற்ற என் மீது ஆணை இல்லாதவர்கள் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொதர,கிம்புலாகலவில் விளையாட்டு கழகமொன்றுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஒரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றனர். இவ்வாறான ஒரிருவரினால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பின்நகர்த்த முடியாத அளவிற்கு பாதிப்புக்கு உரியதாக உள்ளது.

எனவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியை பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது கட்சியை மறுசீரமைக்க நேரம் வந்துள்ளது. ஆகவே உடனடியாக கட்சியை மறுசீரமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை மாத்திரமின்றி ஏனைய கட்சிகளையும் மறுசீரமைக்க வேண்டும். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியை பொறுப்பேற்ற போதும் அதில் தோல்வி அடைந்துள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன குழுவின் ஊடாக மக்கள் ஆணையை பெற்ற என் மீது ஆணை இல்லாதவர்கள் தீர்மானம் எடுக்கின்றனர்.

இந்நிலையில் நான் நிதி அமைச்சராக பதவி வகித்த போது மாணவர்களுக்கான காப்புறுதிகள் மற்றும் டெப் கணிணி வழங்குவதற்கான திட்டங்களை நானே ஆரம்பித்தேன். எனினும் இதற்கு சொந்தம் கொண்டாடுவதற்கு பலர் முனைகின்றனர் என்றார்.

எம்.எம்.மின்ஹாஜ்

2 comments:

  1. மாரப்பன பிழையாக இருக்கலாம் ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினரும், தேர்வசெய்யப்பட்ட உறுப்பினரும் சமமான உரிமை உடையவர்கள் தான் என்பது நன்றாக தெரிந்தும், மக்கள் மத்தியில் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இரண்டாம் தரமானவர்கள் போல் மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது மிகவும் கண்டிக்க தக்கதாகும்.

    ReplyDelete
  2. மாரப்பன பிழையாக இருக்கலாம் ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினரும், தேர்வசெய்யப்பட்ட உறுப்பினரும் சமமான உரிமை உடையவர்கள் தான் என்பது நன்றாக தெரிந்தும், மக்கள் மத்தியில் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இரண்டாம் தரமானவர்கள் போல் மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது மிகவும் கண்டிக்க தக்கதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.