Header Ads



"ஜனா­தி­ப­தி­யுடன் ஆழ­மாக கலந்­து­ரை­யாடி, பிர­தமர் விவ­கா­ரத்தில் தீர்­மானம்"

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இந்த வாரம் இடம்பெறும் எனவும் ஜனா­தி­ப­தி­யுடன் ஆழ­மாக கலந்­து­ரை­யாடி பிர­தமர் விவ­கா­ரத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார். 

பிரே­ர­ணையில் கைச்­சாத்­தி­டு­வது குறித்து தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வந்­துள்ள நிலையில் எதிர்­வரும் மாதம் 4 ஆம் திகதி குறித்த பிரே­ரணை வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென வின­விய போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறி­ய­தா­னது, 

பிர­த­ம­ருக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக நெருக்­கடி நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியே பிர­தான கார­ண­மாகும். அவர்­களின் கொள்­கைகள், செயற்­பா­டுகள் என்­ப­வற்றில் பாரிய நெருக்­கடி நிலை­மைகள் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில உறுப்­பி­னர்­களே மீண்டும் தமது நிலைப்­பாட்­டினை மாற்­றி­ய­மைத்து பிர­த­ம­ருக்கு எதி­ராக செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஊட­கங்­களில் அறிய முடி­கின்­றது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம்  இன்­னமும் எந்­த­வித இறுதித் தீர்­ம­ன­தையும் எடுக்­க­வில்லை. தீர்­மா­னத்தை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும். நேற்­றைய தினமே (நேற்று முன்­தினம்)  ஜனா­தி­பதி பாகிஸ்­தா­னிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு இலங்­கைக்கு வந்­துள்ளார். எனவே அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் இந்த வாரத்தில் முன்­னெ­டுக்­கப்­படும்.  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இந்த வார நடுப்­ப­கு­தியில் கூடும். ஜனா­தி­பதி தலை­மையில் கூடும் எமது கூட்­டத்தில் பிர­தா­ன­மாக பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா­யப்­படும். இதில் மத்­திய குழு­வாக என்ன தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­கின்­றதோ  அத­னையே நாம் சக­லரும் முன்­னெ­டுப்போம். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­பது குறித்து கட்­சிக்குள் இரண்டு கருத்­துக்கள் நில­வு­கின்­றது. எனவே இறுதி நிலைப்­பாடு குறித்து ஆழ­மாக ஆரா­ய­வேண்­டிய தேவையும் உள்­ளது. 

இந்த விட­யத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக அல்­லாது எவரும் தனிப்­பட்ட தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடி­யாது. எனினும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலர் கைச்சாத்திட்டுள்ளனர். இது கட்சியில் ஒழுக்க கோவைக்கு முரணானது. எனவே இது குறித்தும் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய வேண்டும். எவ்வாறு இருப்பினும் பிரதமரை ஆதரிப்பதா இல்லையா என இன்னும் இஸ்திரமான நிலைபாட்டினை நாம் எட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Party received just 4% votes talking about replacing PM.

    ReplyDelete

Powered by Blogger.