Header Ads



"பொய் தகவல்" - வதந்தி என கனடாவும் மறுப்பு


-முஹம்மது யூசுப்-

கனடா பிரதமர் ஸிரியா மக்களை தன் நாட்டிற்குள் அனுமதித்தார் அதற்காக 150பேரை ஏற்றிவர ஒரு விமானத்தை அனுப்பினார் அதை இயக்கியவர் ஒரு தமிழர் என்றெல்லாம் சமீபகாலமாக முகநூலில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது!

இப்படியாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை கனடா ஸிரிய மக்களை தங்கள் நாட்டுக்கு அழைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை இவர்கள் விமானத்தை இயக்கியதாக கூறிய 

Sriwijaya Krish தனது மறுப்தை தன் முகநூலில் பதிந்துள்ளார்.

மேலும் இந்த செய்தியை Canada Border Services Agencyயும் வெறும் வதந்தி என்று மறுத்துள்ளது!

இதனை பரப்பியதில் சில இஸ்லாமிய இயக்க தலைவர்கள் உட்பட பலருக்கு பங்குண்டு!

செய்திகளின் உண்மைத் தன்மை அறியாமல் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்பும் அப்பாவிகள் நிறைந்த சமூகத்தில் வாழ்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6.



No comments

Powered by Blogger.