March 27, 2018

மக்களுக்கு கிடைத்த வரமே "ஜம்இய்யத்துல் உலமா"

நாட்டு மக்களின் நன்மதிப்பையும் ,   மரியாதையையும் தன்னகத்தே கொண்டு சுமார் 94 வருடங்களாக இயங்கி வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது செயற்பாடுகளையும் நகர்வுகளையும் மிக அவதானமாகவும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்தும் செய்து வருவதனால் அதன் மதிப்பை மேம் மேலும் வளர்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதன் பெயரிற்கு குந்தகம் விளைவிக்க சிலர் நினைக்கின்றனர். இந்த வகையில் இலங்கை நாட்டின் முஸ்லீம்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கி நெறிப்படுத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகளில் அதிகமானவற்றை தெரியாதவர்களும், சொந்த இலாபங்களை முன்னிருத்தியும் தாம் இலாபமீட்ட வேண்டும் என்றும் நினைப்பவர்கள்  ஜம்இய்யாவை விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த விமர்சனங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதை காணும் போது கவலை ஏற்பாடுகின்றது. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலமாக்காளின் சபை அன்றிலிருந்து  இன்று வரை  எந்த வித இலாபமீட்டலும் இல்லாமல் மார்க்க சட்டங்கள், கல்வி, சமூக சேவை, சகவாழ்வு, ஒற்றுமை, வியாபார ,கவுன்சலிங், ஹலால் , இஸ்லாமியப்பிறைக் கணிப்பீடு, மக்தப் என பல பாரிய சேவைகளை ஆற்றி வருகின்றது என்பதை புத்தி சுயாதீனம் உள்ள எவரும் மறுக்க வாய்ப்பில்லை. 
150 இற்கும் மேற்பட்ட கிளைகளை உள்ளடக்கி நாடு முழுவதும் தன்னாலான பல பணிகளை முன்னெடுக்கின்ற போது  நெருக்கடிகளை விட விமர்சனங்கள் ஒரு சில முட்டாள்களால் முன் வைக்கப்படுவது ஜம்இய்யாவின் பணிகளுக்கு பாரிய முட்டுக்கட்டைகளாக அமைந்து விடுகின்றது. அகில இலங்கை ஜம்இய்யா என்கின்ற பொழுது அது ஒரு யாப்பை முன்னிருத்தி அழகிய தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 33 உலமாக்களை  உள்ளடக்கிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை கொண்ட ஒரு அங்கமாகும். விமர்சனங்கள் செய்கின்றவர்கள் முதலில் இந்த அங்கத்தில் இருப்பவர்கள் எவரும் மலக்குகள் இல்லை என்பதை முதலில் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் என்ற வகையில் பிழைகள் ஏற்படுகின்ற பொழுது அவற்றை அழகிய முறையில் உரியவர்களிடம் சுட்டிக்காட்டி அதனை திருத்தி அமைக்கின்ற பொழுது முன்னேற்றம் ஒன்றை காண முடியுமே தவிர ஊடகங்களில் விமர்சித்து தம்மை ஹீரோக்களாக ஆக்க நினைப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் பல உலமாக்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது.அந்தப் பெயரை இழிவு படுத்தி , அதற்கு ஏசி , அதன் பெயரை ஊடகங்களில் தறக்குறைவாக பேசி விமர்சிப்பவர்கள் மற்றும் அதற்கு துணை போகின்றவர்கள், அதன் பக்கம் தமக்கு கீழ் உள்ளவர்களை வழி நடத்துபவர்கள்  அனைவரும் நாம் அல்லாஹ்வின் தூதரின் வாரிசுகளை ஏசுகின்றோம், தேவையில்லாமலும் இழிவாகவும் விமர்சிக்கின்றோம் என்பதை புரிந்து அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ள வேண்டும். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இந்த நாட்டில் அரசாங்கமோ, பாதுகாப்பு படையோ, சட்ட சபையோ, நீதிமன்றமோ, மத்திய வங்கியோ அல்லது ஏனையை அமைச்சுக்களோ அல்ல என்பதை  அனைவரும் விளங்கி வைக்க வேண்டும். நாட்டில்  ஏற்படும் ஒவ்வொரு விடயங்களுக்கும் ஜம்இய்யா பதில் சொல்ல வேண்டும் என ஒரு சிலர்  கூக்குரல் இடுகின்றனர். அசாதாரண நிலை ஏற்படுகின்ற போது ஜம்இய்யா என்ன நடவடிக்கை எடுத்தது என இன்னும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்யாவிடினும் ஜம்இய்யா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ஜம்இய்யா பாதுகாப்பு படை என்ற நினைப்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை என்றாலும் ஜம்இய்யா என்கின்ற அமைப்பு என்ன செய்கின்றது என்று முட்டாள் தனமாக வினா தொடுக்கின்றனர். உதாரணத்திற்காக அண்மையில் பெண்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த கூட்டமொ ன்றில் நடனம் ஆடியது யாவரும் அறிந்ததே . இதன் போது ஜம்இய்யா என்ன செய்கின்றது என்றும் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்றும் ஊடகங்களில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதனை பார்க்கின்ற போது வேடிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஜம்இய்யா முஸ்லீம்களை இஸ்லாமிய வரயறைகளுக்குள் வைத்து பாதுகாற்க முயற்சிக்கின்றது.
ஜம்இய்யா பிரச்சினைகளின் போது தன்னாலான பல முயற்சிகளை உரிய முறையில் முன்னெடுத்து வருகிறது.

 அண்மையில் ஏற்பட்ட கண்டி பிரச்சினையின் போது ஜம்இய்யா என்ன செய்கின்றது என்று தெரியாமல் பலரும் பலவாறு ஊடகங்களில் விமர்சனம் செய்து வந்தனர். என்றாலும் ஜம்இய்யா முன்னெடுத்த முன்னெடுப்புக்களை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது செயற்பாடுகளில் பிரசுரம் செய்ய முடியுமானதை மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய முறையில் பிரசுரம் செய்வதினூடாக தேவை இல்லாத விமர்சனங்களை தவிர்க்க முடியுமாகும்

விமர்சனங்கள் முன்வைக்கின்றவர்களை பார்கின்ற போது அவர்கள்  சமூகதிற்காக எந்தவொன்றையும் செய்யாது  சமூக வலைதலங்களில் பதிவுகளை இட்டவர்களே தவிர வேரு எதுவும் செய்யாதவர்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள்.

இலங்கை முஸ்லீம்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரமாகவே நான் இந்த ஜம்இய்யாவை கருதுகின்றேன். இந்த நிஃமத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். விமர்சனங்கள் செய்யும் போது அதனை உரியவர்களிடம் உரிய முறையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்போது எமது நல்ல சிந்தனைகள் மூலம் இந்த நாட்டு முஸ்லீம்களுக்கு மாத்திரமின்றி அனைவருகும் பயனலிக்கும். 

எனவே வீண் விமர்சனங்களை விட்டுவிட்டு எமது முன்னோர்கள் நமக்காக பெற்றுதந்த உரிமைகளை பாதுகாக்கவும், ஜம்இய்யாவுடன் இணைந்து செயற்பாட்டு எமது சமூகத்தின் விடிவை உறுதி செய்யவும் அனைவரும் முன்வர வேண்டும்.  

, "muhammed farhadh"

12 கருத்துரைகள்:

According to my knowledge the withdrawal po of the HALAL is our lost ever

It may have been serving its purpose when it founded, but now their actions are only benefitting few elites. Of course we can agree, it is not a police, or any other entity, but who put the motto ‘providing community leadership’ and ‘apex religious body’

ur correct
but acju old 1 b4 15 years
new 1 very bad

ஜம்மியாவிற்கும் முஸ்லிம்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவதே அவர்கள் சூழ்ச்சித் திட்டம். இந்த நிர்வாக கட்டமைப்பை சிதைக்கவே பாடுபடுகிறார்கள், எம்மவர்களும் அவர்களின் சூழ்சிகளில் பலியாகாமல் இருக்க வேண்டும்.

Yes ACJU is a nihmath.

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் சரியான வழிகாட்டல் மூலம் வழி நடத்தினால் அல்லாஹ் சிறப்பை தருவான் ஆனால் குர்ஆனையும், ஹதீசையும் ஓரம் கட்டும் வேலையை செய்தால் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதை ACJU அங்கத்தவர்கள் தெரிந்து கொள்வார்களேயானால் மிக சிறப்பாக இருக்கும்

I would like to informe this massage who are against to jamiathul Ulama, please read the history of Russia what has happened to Muslims and Ulamas, then you guys can talk about present situation in Srilanka.

எங்கள் உலமாக்களைக் குறை சொல்லி நாங்கள் மற்றவர்களிடம் நல்ல பெயர் பெற் நாங்கள் மடையர்கள் அல்ல அதுதேபோல் உலமா சபை ஒன்று இருப்பது இஸ்லாத்தின் மீதான மற்றவர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்குவதற்கும் சேர்த்துத்ததானே? இதை ஏன் நீங்கள் உணர்ந்து செயற்பட மாட்டீர்கள் இல்லை.
மேலும் நீங்கள் மார்க்கம் என்றால் மத்கபில் இருந்து செர்ல்லாமல் அழ்ழாhவின் தூதரின் வழகாட்டலில் இருந்து சொல்லுங்கள் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமான பதிலை நீங்கள் வழங்குங்கள் அப்போது பாருங்கள் மார்க்கம் தானாக வளரும்
அதைவிடுத்து நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்காத விடயங்களைக் கூறி சமூகத்தில் தேவையாற்ற விடயறங்களைப் பதிவு செய்து நேரத்தை வீனடிக்க வேண்டாம்

Kaaikkinra maraththukkuththaan kalladi vilum....Brothers ellarum unarattum

NALLA KARUTTHUKKAL....
(NAYAWANJAGAM ATRA)ISLAMIYA SAHOODARAR-Hal Matthiram aalamaha manadhil padhiya-waithukkollungal....
"ISLAMIYA KHILAFATH-IN VEELCHI,MUSLIM-HALIN OTRUMAIYIl e'tpatta BALAHEENAME!!!

Post a Comment