Header Ads



மனிதர்களை கொல்வது தேசப்பற்றல்ல, புத்தர் போதித்ததுபோல் சகல மதங்களையும் மதிக்கனும்

இனங்களுக்கு இடையில் காணப்படும் பல்லின தன்மையை மதித்து சகலரும் நடந்துக்கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -09- நடைபெற்ற சமய மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனிதர்களை கொல்வது தேசப்பற்றல்ல. அனைத்து மக்களையும் ஒன்றாக கட்டியெழுப்புவதே தேசப்பற்று. அனைவரும் சரிநிகர் சமமானவர்கள் என்று நினைக்க வேண்டும்.

அப்படி நினைக்க முடியாது என்றால், அது இயற்கைக்கு எதிரானது. நமது நாட்டில் பல இனங்கள் இருப்பது வலுவானது. அந்த பல்லினத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

தனிப்பட்ட பிரச்சினைகளை இனவாத பிரச்சினைகளாக கருதி செயற்படுவது முட்டாள்தனம். புத்த பகவான் போதித்தது போல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்.

பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகங்களில் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினர் தொடர்பில் அச்சம் இருந்தால், அந்த அச்சத்தை போக்கி சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

Powered by Blogger.