Header Ads



இன்று வட்சப் தடை நீக்கம், பேஸ்புக் தடையும் நீங்குகிறது

இன்று நள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் Viber சேவையின் தடை நீக்கப்பட்டது.

2

பேஸ்புக் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஜனாபதியின் செயலாளருக்கு இடையில் நாளைய தினம் இடம்பறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக்கிற்கான தடையை தீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இனவாத கருத்துக்கள் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு வைபர் மற்றும் வட்ஸப் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.