Header Ads



முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர் - இனவாதத்தை பற்றவைத்து, வன்முறையை தூண்டும் தேரர்

சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் பதிலளித்துள்ளார்.

சகல பிரச்சினைகளுக்குமான அடிப்படைக் காரணங்களை தேரர் சந்தேகமற தெளிவுபடுத்தியுள்ளதாக சகோதர மொழி தேசிய பத்திரிகையொன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

“உண்மையில் இன்று இடம்பெறவேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதாகும். ஒவ்வொரு இனத்துக்கும் இந்நாட்டில் சட்டங்கள் வேறுபடக் கூடாது.  நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆளமாக பதிந்துள்ளது.

நாட்டின் பொதுவான சட்டம் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று சரீஆ சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. திருமணச் சட்டங்களுக்கு தனியான வக்பு நீதிமன்றம் இருக்கின்றது. தனியான பாடசாலை கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. அந்தப் பாடசாலைகளுக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்ல முடியும்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அவ்வாறு விசேட பாடசாலை இல்லை. நாட்டின் தேசிய உடை தொடர்பில்  சட்டங்கள் உள்ளன. இருப்பினும், முஸ்லிம்களுக்கு அது செல்லுபடியற்றதாக காணப்படுகின்றது. சிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடை ஒன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது.

ஆனால், முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த சட்ட நடைமுறையில் பாரிய வேறுபாடு தென்படுகிறதல்லவா?

இலங்கையிலுள்ள அனைவருக்கும் 18 வயதை அடைந்தால் மாத்திரமே திருமணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது. இருப்பினும், திருமணத்தில் கூட முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் செல்லுபடியாவதில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டயில் முக்கிய சம்பவமொன்று இடம்பெற்றது. 14 வயது பெண் பிள்ளையொருவர் திருமணம் முடித்துள்ளார். அந்த பெண் பிள்ளை முஸ்லிம் இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். குறித்த பெண் பிள்ளையும் இஸ்லாம் சமயத்துக்கு மாறியுள்ளார். இந்த பெண் வீட்டுக்குத் தெரியாமல் சென்றே திருமணம் செய்துள்ளார்.

இருப்பினும், தற்பொழுது எந்த முறைப்பாடும் இல்லை. வழக்குத் தொடரவும் இல்லை. இந்த பெண் பிள்ளை சிங்கள இளைஞன் ஒருவருடன் சென்றிருந்தால், குறித்த இளைஞன் சிறையில் இருப்பார். இந்த சம்பவத்தில் சட்டத்திலுள்ள விசேட மாற்றம் தெரிவதில்லையா?

முஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத்துக்கு வருவதில்லை. முஸ்லிம்களின் நீதிமன்றத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்குக் கூட முடியாது. இதுபோன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை. இதனால், சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது.

நாட்டிலுள்ள சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக நிறுத்தப்படுவது அநீதியானது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது முஸ்லிம் பெண்களிடமுள்ள வெட்கம், பயம் இல்லாமல் போகிறதாம். அப்படியென்றால், சிங்கள, தமிழ் பெண்களின் வெட்கம், பயம் இல்லாமல் செல்வதில்லையா? இந்த சிறப்புரிமை எமது நாட்டிலுள்ள பிக்குகளுக்காவது இல்லை. வழக்குகளின் போது பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்றனர்.

வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களின் முன்னால் தனியான சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அன்றைய தினம் வாகன போக்குவரத்து ஒழுங்குகள் செல்லுபடியற்றதாகின்றன. அந்த இடத்தில் புதுமையான சுதந்திரமொன்றுதான் இருக்கின்றது. இந்த சிறப்பம்சம்தான் என்ன?

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகர்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு தலைக்கவச சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? அது செயற்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பில், பௌத்தர்களுக்கும், இந்துமதத்தினருக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் ஏமாற்றம் இருக்கின்றது.

அப்படியானால், ஒரு தனியான மதப் பிரிவினர் வாழும் பிரதேசங்களுக்கு விசேட சிறப்புக்கள் இருக்க வேண்டியதில்லை. சட்டம் சகலருக்கும் சமமாக்கப்பட வேண்டும். ஹலால் ஊடாக முஸ்லிம் அல்லாத நுகர்வோருக்கும் வரி சுமத்தப்படுகின்றது. இதென்றால், நியாயமான நடவடிக்கை ஒன்று அல்ல.

இந்த சகல பிரச்சினைகள் தொடர்பிலும் முஸ்லிம் உட்பட சகல மதத் தலைவர்களும் திறந்த கலந்துரையாடலை நடாத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையாயின் சமூகங்களிடையே நீதி நிலைநாட்டப்படுவதில்லை. இந்த நிலைமை தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால், அழுத்தங்கள் எந்த தோற்றத்தில் வெளிப்படும் என்பது தெரியாது எனவும் தேரர் அழகான முறையில் சகோதர சமூகத்துக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

சமூக அநீதி எனும் போர்வையில் இனவாதத் தீ பரவுவதற்கான அத்தனை கருத்துக்களையும் சாதாரண மக்களிடம் திணிக்கப்படும் போது நாட்டில் இனவாதம் தீப்பிடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இது போன்ற கருத்துக்களை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் நியாயமான ஆதங்கமாகும். 

நன்றி- திவயின (21.03.2018)
தமிழில் – முஹிடீன் இஸ்லாஹி

13 comments:

  1. பிக்கு சார், நீங்கள் சொல்வதும் நியாயம் தானே.

    இலங்கை சட்டம் எல்லாருக்கும் சமமாக இல்லை, எனவே இவைற்றை முதலில் சரிபடுத்தினாலே முஸ்லிம்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்

    ReplyDelete
  2. இன்று தேரர்களுக்கு பிரபல்லியம் அடையவேண்டுமென்ற ஆசையால் இவ்வாறான எதிர்மறை சிந்தனைகள கூறிக்கொண்டிரிக்கின்றார்கள் இவர் கூறுவது இவருக்கு பரிந்துள்ளதா???!இலங்கை நாட்டில் சட்டத்திற்கும் அதன் நடைமுறைகளுக்கும் அப்பால் தங்களை ஆக்கிக்கொண்ட இந்த சாதரன மனிதர்கள் என்ன கதைக்கின்றார்கள் என்று புத்தி ஜீவிகளே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  3. @Antony இந்த பிக்கு சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளும் புலி பயங்கரவாதிகள் இந்த பிக்கு எதிர்க்கும் தமிழீழ கோட்பாடையும், வடகிழக்கு இணைப்பையும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள்?

    ReplyDelete
  4. Ina vathan seyyum enthe nayaha irunthalum kaithu seythu satte olungai pene veamdum

    ReplyDelete
  5. பஸ்ஸில் பணிக்கும் எந்த ஒரு நபரும் தங்களுக்கான ஆசனத்தில் மறந்து கூட உட்கார முடியாதே இதை எதில் சேர்ப்பது.

    ReplyDelete
  6. these comments are rubbish. ehy not one muslim scholer reply this thero without delay to the same news paper pl

    ReplyDelete
  7. මාගේ අදහස්:
    1.නීතිය සමාන නිසාද නුවර හා අනිකුත් ප්‍රදේශවල මුස්ලිම් කඩ සහ නිවාස ගිනිබත් කරද්දි පොලිසිය හා හමුදාව එ් දිහා බලා සිටියේ?
    2.විවාහ නීතිය පමණයි ෂරීආ වන්නේ අනිත් නීති හැම එකාටම වාගේ පොදුයි.හේතුව පවුලක් කියන්නේ අනිකුත් ආගම්වලට වඩා ඉස්ලාමයේ වටිනා කොටසක් නිසාය.
    3.ඉස්ලාම් ආගම පවුලේ කොටසක් වන ස්ත්‍රීන් ඉතා අගයකොට සලකනසේම ඔවුන්ව ව්‍යාපාරික දැන්වීම් භාණ්ඩයක් ලෙස භාවිතා නොකරන නිසා පාසල් නිල ඇඳුම් වැඩිපුර අවශ්‍ය වේ.
    විවාහවන්න පුලුවන් වයස අඩු නමුත් එසේ කරන්නේ කීයෙන් කීදෙනා ද? එසේ අඩු වයසේ විවාහ වන සිංහලයන් නැද්ද ?
    4.ස්ත්‍රීන් ⁣අගය කොට සලකන ඉස්ලාම් ඔවුන්ව අවමානයට පත්කිරීම වලකාලීමට ප්‍රසිද්ධියේ විනය පරීක්ෂණ වලට යොමු නොකරයි
    5.සිකුරාදා සහ මුස්ලිම් ගම්මානවලත් නීතිය හා සාමය රැකිය යුත්තේ පොලිසිය මයි; පොලිසිය අකාර්යක්ෂනම්....එයට මුස්ලිම් ජාතිය වැරැදි ද?
    රිසා

    ReplyDelete
  8. அந்தந்த இனங்களுக்கு சட்டம் வித்தியாசப்படுவது எந்த வகையிலும் அநீதியல்ல. மாறுபட்ட நடைமுறைகளுக்கு சட்டமும் மாறுபடுவதில் என்ன தவறு உள்ளது.?? ஆடை பற்றிய சட்டத்தைப் பொறுத்தவரையில் குறைவாக அணிவது சிங்களவர்களின் நடைமுறை ஆக இருக்கையில் அதனை எப்படி ஒரு பொதுச் சட்டமாக ஆக்குவீர்கள்? ஒரு சமூகத்தின் சட்டங்களை இன்னொரு சமூகத்தின் மீது திணிப்பது எந்த வகையிலும் நியாயமற்ற செயலே. புத்த பிக்குகளுக்கென்ற பிரத்தியேகமான சட்டங்கள் உள்ளனவே... அவற்றை இவர்கள் கண்டு கொள்வதில்லையா? இவரின் பேச்சு தெளிவான ஒரு இனவாதமே!

    ReplyDelete
  9. இங்கே, என்னுள் ஏற்பட்ட முதலாவது கேள்வி?
    முஸ்லிங்கள் ஏற்றுக்கொண்டு வாழும் கொள்கை, அதன் கட்டளை என்பவற்றை அமுல்படுத்தும் போது, ஏன் சிங்களவர்களில் ஆழமாக பதிய வேண்டும்?

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, சிங்கள-தமிழ்-முஸ்லிம் என சட்டத்திற்கு பாகுபாடு கிடையாது.

    சிங்களவர்களுக்கு பௌத்த மத சுதந்திரம் இருப்பது போல, தமிழர்களுக்கு இந்து மத சுதந்திரம் போல,

    முஸ்லிங்களுக்கு இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் கட்டளையையும் நடைமுறைப்படுத்தும் உரிமை இருக்க வேண்டும்.

    சட்டம் எல்லா இனங்களுக்கும் கொடுத்திருக்கும் உரிமை அடிப்படையில்; முஸ்லிங்களும், அவர்களின் கொள்கை-கட்டளை என்பவற்றை தங்களின் வாழ்வின் மூலம் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

    இது விஷேட சலுகையோ, வரப்பிரசாதமோ இல்லை. என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    எல்லா இனங்களிலும் தவறுகள் செய்பவர்கள் இருப்பது போல, முஸ்லிங்களிலும் தவறுகள் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக, முஸ்லிங்கள் செய்வதை மட்டும் மக்கள் மயப்படுத்தி, முஸ்லிங்கள் தான் தவறு செய்கிறார்கள் என கருத்து வெளியிடுவது, ஒரு தலைபட்சமான சிந்தனையும் மதவாத சிந்தனையை தூண்டும் கருத்துமாகும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சுபீட்ஷத்திற்காகவும் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என எல்லோரும் ஒன்றிணைந்து இனவாதம், மதவாதம், மொழிவாதம் களைந்து தவறுகளை திருத்தி சகோதரத்துவத்தோடு பயணிப்பதே நம் எல்லோர் முன்னாலும் காணப்படும் முக்கியபணியாகும்.

    ReplyDelete
  10. Indian English tiger poking his nose here

    ReplyDelete
  11. He tells us to change our religion

    ReplyDelete
  12. இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானோரின் தாய் மொழியாகிய தமிழ், தெற்கில் ஓர் அரச மொழியாக முறையாக அமுல் நடத்தப் படுவதில்லை.  ஆம்,  சட்டம் இங்கும் சகலருக்கும் சமமாக இல்லை.

    இதில், அரசாங்கம் கவனம் செலுத்தி, முதலில் அவர்களை முழுமையான இலங்கையர்களாக்கி அந்நியமான எண்ணங்களை அவர்களிடமிருந்து களைய வேண்டும்.

    அடுத்து,  முஸ்லிம்கள் அதிக வரப்பிரசாதங்களை அனுபவிப்பவர்கள் என்றால் அவை இறைவனால் இஸ்லாத்தின் மூலம் அவர்கள் பெற்றவை.   அவை அவர்களுக்காக மாத்திரம் அல்ல. 

    சூரியனும் சந்திரனும் சகலருக்கும் சொந்தமானவை போன்றே, இஸ்லாம் சகலருக்கும் சொந்தமானது.  அதன் கதவுகள் அனைவருக்காகவும் திறந்தே உள்ளது.

    அனைவரதும் அனைத்துக் பிரச்சினைகளுக்கும் தீர்வு அங்குதான் உள்ளது,  காரணம் அது அனைவரையும் அனைத்தையும் படைத்த ஏக இறைவனால் அருளப்பட்டதாகும்.

    "(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்."
    (அல்குர்ஆன் : 2:256)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.