Header Ads



வெள்ளிக்கிழமைக்குள் நஷ்டஈட்டை, வழங்கி முடிக்கும்படி பிரதமர் உத்தரவு

-JM-Hafeez-

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சகல நட்டஈடுகளையும் வழங்கி முடிக்கும் படி பிரதர் கண்டியில் வைத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். (10.3.2018)

கண்டிக்கு விஜயம் செய்த பிரதமருடக் அமைச்சர்களான ரவுப் ஹகீம, எம்.எச்.ஏ. ஹலீம், லக்ஸ்மன் கிரியெலல, ருவன் விஜேவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா உற்பட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சரும் குழுவினரும் பாதிக்கப்பட்ட திகன, தெல்தெனிய, கெங்கல்ல, உற்பட அனேக இடங்களுக்கு நேரடியாகச் சென்றார். பின்னர் கண்டி செயலகத்தில் இடம் பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்திலும் கலந்து உரையாற்றினார். அங்கு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தாவது-

 பாதிக்கப்பட்ட சகலருக்கும் மிக விரைவாக நட்டஈடுகள் வழங்க்கபப்பட வேண்டும். எதிர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (16) இதற்கான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதுவரை கிடைத்த புள்ளி விபரங்களின் படி 465 நபர்களுக்கு நட்டஈடுகள் வழங்ஙகப்பட வேண்டியுள்ளது. இதில் 14 பள்ளிகளை பிரதானமாகக் குறிப்பிடலாம்.  ஒரு பள்ளி பூரணமாக தாக்கப்பட்டுள்ளது. 6 பள்ளிகள் பகுதி அளவிலும் 7 பள்ளிகள் சிறிய அளவிலும் தாக்கப்பட்டுள்ளன. 

கட்டிடங்களைப் பொருத்தவரை 87 கட்டிடங்கள் பூரணமாகவும் 196 பகுதி அளவிலும் 182 கடடிடங்கள் சிறிய அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றுக்கான மதிப்பீடுகளை உடன் மேற்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். அத்துடன் சுற்றுலாத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி செயற்படும் பலரது அன்றாட ஜீவனோபாய வழி முறைகள் சவாலுக்குட் பட்டுள்ளதாகவும் கூறினார். 

அத்துடன் மூன்று உயிர் இழப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவற்றுக்காக உடன் தலா ஒரு இலட்ச ரூபா வழங்கும் படியும் இதனை 4 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். 

இங்கு கருத்து வெளியிட்ட மத்திய மாகாண முதலமைச்சர் தெல்தெனியாவில் மரணமடைந்தவரது குடும்பம் அனாதரவான நிலையில் காணப் படுவதாகவும் அதேபோல் அம்பதென்ன பகுதியில் மரண மடைந்தவரது மனைவி கற்பிணியாக இருப்பதுடன் 5ம் வகுப்பு கல்வி கற்கும் பிள்ளை ஒன்று இருப்பதாகவும் அவர்களுக்கும் துரிதமாக வாழ்வாதார வழி முறை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். 

1 comment:

  1. You are still wearing a full suit. Shame on you as a Sri Lankan....

    ReplyDelete

Powered by Blogger.