Header Ads



சிரியா மக்களுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் போராட்டம் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு போர்நிறுத்தத்தை நிலைநாட்ட ஐ.நாவிடம் வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (1)முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த படுகொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.



4 comments:

  1. உங்களை கருவறுக்கும் பொது இந்த உலகமே வேடிக்கை பார்த்தது மட்டுமில்லாமல் இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மை சமூகம் உங்களின் கழுத்தை நெரித்து உங்களின் வாழ்விடங்களில் பள்ளிவாசல்களையும் சட்டவிரோத குடியுருபுகளையும் செய்தது. ஆனால் உங்களுக்கு சுட்டு போட்டாலும் ரோசம் மானம் வராது

    ReplyDelete
  2. அமெரிக்கா தன்னை மத்திய கிழக்கில் நிலை நிறுத்திக்கொள்வதற்காக ஏற்படுத்திய யுத்த நிலை முழுக்க முழுக்க அமெரிக்காவே இதற்கு பொறுப்பு

    ReplyDelete
  3. @varan, மத்திய கிழக்கில் எண்ணை வளம் இருப்பதை கண்டுப்பிடித்து கொடுத்தது யாரு?, அதை வெளியே எடுத்து கொடுப்பது யாரு?, நாட்டையும், வளங்களையும் பாதுகாக்க ஆயுதங்கள் கொடுப்பது யாரு? எலலாமே அமெரிக்கா-மேற்கு நாடுகள் தான்.

    மத்திய கிழக்கு மண்ணுக்குள் “எண்ணையும்”, அங்குள்ள மக்களின் தலைக்குள் “கழி-மண்ணும்” இருப்பது தான் அங்குள்ள யுத்தங்களுக்கு ஒரே காரணம்.

    ReplyDelete
  4. மேலே Varan என்பவர் உலகில் நடந்துகொண்டிருப்பவற்றை விளங்கிக் கொண்டளவிற்கு Anusath Chandrabal என்பவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது மட்டும் உண்மை. இனவாதிகளுக்கு உண்மைகள் புலப்படாது. அவர்கள் என்றும் இனவாதக் கருத்துக்களையே விதைப்பர். அதனையே இங்கு Anusath Chandrabal என்பவரும் தனது இனவாதத்தை கசித்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.