Header Ads



"கண்டியில் வன்முறையை ஏற்படுத்தியவர்களுக்கு, தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்"

சிங்கள பௌத்த மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மஹா சங்கத்தினர் தலைமையிலான சர்வமதத் தலைவர்கள் பார்வையிட்டனர்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட   சிறிய சம்பவம் அமைதியற்ற இன மோதலாக மாறிய  இத்தேபான தம்மாலங்கார தேரர்  குறிப்பிட்டார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மஹா சங்கத்தினர் தலைமையிலான சர்வமதத் தலைவர்கள் பார்வையிட்டனர். 

ஜூம்ஆ பள்ளிவாசலுக்கும், திகன பிரதேசத்திற்கும் அவர்கள் விஜயம் செய்தார்கள். மஹா சங்கத்தினர் தலைமையிலான சர்வமதத் தலைவர்கள் வன்முறையினால் உயிரிழந்த இளைஞரின் குடும்ப உறுப்பினரை சந்தித்தார்கள்.

இதன் பின்னர் பலகொல்ல பௌத்த மத்திய நிலையத்தில் மஹா சங்கத்தினர் ஒன்றுகூடினர். 

அங்கு உரையாற்றிய அதி  இத்தேபான தம்மாலங்கார தேரர்  கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட   சிறிய சம்பவம் அமைதியற்ற இன மோதலாக மாறியது என்று  குறிப்பிட்டார். 

சொத்துக்களை அழித்து, மக்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.