March 09, 2018

இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின், பாதுகாப்பாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான்

இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்கள் மீது வன்முறையையும், காட்டு மிராண்டித்தனத்தையும் எப்போதும் கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் சிங்களப் பேரினவாத அரசு தற்போது இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களையும் திட்டமிட்டுத் தாக்கத் தொடங்கியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனத்துவேசத் தாக்குதலையும், வன்முறை வெறியாட்டத்தையும் போல மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முனைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

அம்பாறையில் உள்ள ஒரு உணவகத்தில் தொடங்கப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டம் பள்ளிவாசல் மீது தாக்குதல், இஸ்லாமியர்களின் உடமைகளைச் சேதப்படுத்துதல் என நீண்டு இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரானத் தாக்குதல்களாக சிங்களப்பேரினவாதிகளால் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

முதலில் அம்பாறையில் தொடங்கிய இவ்வன்முறை வெறியாட்டமானது பிறகு கண்டி மாவட்டத்தில் பெரும் கலவரமாக உருவெடுத்திருக்கிறது.

கண்டியின் திகன பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியர்களின் வணிக வளாகங்கள் மீது திட்டமிட்டக் கோரத்தாக்குதலைத் தொடுத்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உண்டாக்கியிருக்கின்றனர்.

புத்தப் பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இவ்வன்முறை வெறியாட்டத்தில் இஸ்லாமிய தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பதன் மூலம் இக்கலவரத்தின் வீரியத்தை அறிந்துகொள்ளலாம்.

சிங்களப் பௌத்த மதவெறி அமைப்புகள் இப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி அதன்மூலம் இஸ்லாமியர்கள் மீதான தங்களது இனத்துவேசத்தையும், வன்மத்தையும் வெளிக்காட்டியிருக்கின்றன.

கடைகளும், பள்ளிவாசல்களும் பெருமளவு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. இதனையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய இலங்கை அரசின் பாதுகாப்புப்படையினரோ கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர்.

சிங்களப் பெளத்தத் தீவிரவாத நாடான இலங்கையின் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரான இக்கொடுங்கோல் போக்கைக் கண்டித்து கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமியத் தமிழர்கள் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில்தான் அவசர நிலையினை பிரகடனம் செய்திருக்கிறது இலங்கை அரசு.

அதன்பிறகும்கூட இஸ்லாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் மூலம் இவை யாவும் தமிழர்கள் மீதான சிங்களப் பயங்கரவாத அரசின் திட்டமிட்டத் தொடர்தாக்குதல்கள் என்பது ஐயமின்றி புலனாகிறது.

இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் கலவரக்காரர்களையும், இனத்துவேச நடவடிக்கையில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கும் சிங்கள இனவெறி அமைப்பினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இத்தோடு இஸ்லாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசும், சர்வதேசச் சமூகமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர் சுயநிர்ணய போராட்டத்தை ஒடுக்கிய சிங்கள அரசை ஆதரித்த உலக நாடுகள் இனியேனும் அவர்களின் பௌத்த மதத்தீவிரவாதத்தை புரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

10 கருத்துரைகள்:

Hello சீமான்
இந்தியாவில் தான் “இஸ்லாமிய தமிழர்கள்”. இங்கு தாங்கள் “இஸ்லாமிய முஸ்லிம்கள்” என்கிறார்கள்.
இங்கு “தமிழ்” என்பது அவர்களின் தேவைக்கு மட்டும் தான்.

ஏதாவது வேலை வெட்டி இருந்தால் அதை போய் பாருங்கள் சார்.

Ado Seeman or Heeman

Mind your own blood business you idiot. The Politicians here in Sri Lanka attack Muslims for their political advantage and you too make statements for the same.
There is Islam tamils in Sri Lanka. They are Muslims and they don't want themselves called Tamils. Remember that!!
Stay away from Sri Lanka.Try to build some toilets to Indian Tamils

சீமானுக்கு அறளை பெயர்ந்து விட்டது. இஸ்லாமியத் தமிழர் என்று யாரும் இலங்கையில் கிடையாது என்பது அவருக்குத் தெரியாது. தமிழைத் தாய்மொழியாகப் பேசினாலும் தம்மை தமிழர்களாக இலங்கை முஸ்லீம்கள் அடையாளப்படுத்துவதில்லை, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் போல இலங்கை முஸ்லீம்கள் மதம்மாறிய தமிழர்களல்ல, அவர்களின் முன்னோர்கள் அரேபியாவிலும் யேமனிலுமிருந்தும் வந்த அரபுக்கள் என்பது சீமானுக்கு தெரியவில்லை :-) LOL

தமிழ் பேசும் உறவுகளுக்காய் எப்போதும் குரல் கொடுக்கும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் இயக்குனர் சீமான் அவர்களுக்கு இலங்கை இஸ்லாமிய தமிழர்கள் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள் மேலும் இலங்கை இனவாத அரசு மீது இந்திய அரசு அழுத்தம் பிரயோகித்து நீதி கிடைக்கப்பெற வேண்டும்

நாங்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்மய்யா.

சீமான் தமிழகத்தின் தலைசிறந்த கோமாளி. இலங்கை இஸ்லாமியர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும். இலங்கை இஸ்லாமியர்கள் தம்மை தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதே இல்லை என்பதை சீமான் அறிந்திருக்க வேண்டும். இலங்கை இஸ்லாமியர்களின் முரண்பாடான இன அடையாளப் படுத்தலை அவர்கள் கைவிட வேண்டும்.

Niraya Islamiyar thamilar than. Arab vellai muslim kalin soolchiyil karuppu nira muslimkal thankalaiyum Sonaka inam endru vaalikirarkal. Iyo pawam. Muslim enpathu oru inam alla. Athu oru matha adaiyalam. Foolish people forever

முஸ்லிம்களே எங்களுக்காக பரிந்து பேசும் அந்நிய சமூகத்தவர்களை ஓகோ என்று புகழ்வதையும், நம்பி ஏமாறுவதையும் எப்போது தவிர்த்து.,
நாம்,நமது சமூகம் என்று, இயக்க வெறி இன்றி, ஒன்று பட்டு எதிரியை இனம் கனுவோமோ அன்றைய தினம் தான் எமது விடிவை நாம் கண்டு கொண்டோம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்

Thanks you sir for your great concern for Tamil speaking Muslims.But it so sorry to see some of the Srilankan Tamils comments regarding your concern.

Post a Comment