Header Ads



கண்டி இனக்கலவரம், சந்தேக நபர்களுக்கான நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்

இன மோதல்களைத் தடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.

திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது கண்டியில் நடைபெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன் இனிவரும் காலங்களில் அவ்வாறான கலவரங்கள் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. குற்றவாளிகளை நிச்சயமாகத் தண்டிக்கமாட்டார்கள் இது உறுதி! எல்லாவற்றையும் மறக்கடித்து விடுவார்கள். இங்கு சட்டத்தின் ஆட்சி கிடையாது!

    ReplyDelete

Powered by Blogger.