Header Ads



சர்வ மதப் பேரவையின், சிறப்பு அறிக்கை

2018 மார்ச் 07

தற்பொழுது, 'அம்பாறை' மற்றும் 'திகன' ஆகிய பகுதிகளில் தொடங்கி எங்கும் பரவத்தொடங்கியுள்ள கலவரத் துன்பச்செயல் தொடர்பாக எங்களின் கடுமையான அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்துக்கொள்வதோடு, சமயத் தலைவர்களாகிய நாங்கள், இனிவரும் காலங்களில் நிகழப்போவதென்ன என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியத் தேவையிருப்பதை நாங்கள் உணர்ந்தவராய் இருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் மாண்பை எதுவித பாரபட்சமுமின்றி பாதுகாக்கும் வண்ணம் சட்டம்- ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறு இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுகிறோம். எதுவித பாரபட்சமுமின்றி, இனவெறி உணர்வுடன் செயல்படும் கலவரக்காரர்கள் பால் சட்டத்தை  நடைமுறைப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கிய பின், குற்றவாளிகளைத் தப்ப விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலன்று என தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

'அம்பாறை' மற்றும் 'திகன' நிகழ்வுகள் தனிப்பட்ட காரணங்களால் தொடங்கினாலும், அவை மிக விரைவில் இனக் கலவரமாக, சமயக் கலவரமாக  உருவெடுக்கும் நிலையிலிருந்தது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவீன, அச்சு ஊடகம் மற்றும் சமூக தொடர்பு வலைதளம் ஊடாக பகைமை தோற்றுவிக்கக்கூடிய கருத்து மற்றும் காணொளிகள் அடிப்படையில்லாத வண்ணம் பரப்பி அதன் மூலம் மக்கள் நடுவில் கலவரத்தைத் தூண்டி, உணர்வுகளை சீண்டியn சயல்பாடுகளை எவ்வகையிலும் ஏற்க முடியாது. அனைத்து ஊடகங்களும் இதைவிட பொறுப்புடனும், ஒழுங்குமுறையுடனும் செயல்பட்டிருக்க வேண்டுமென்பதை நினைவூட்டுவதோடு, அற்பத்தனமான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக தங்களது ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டாமென இது தொடர்பான அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம். அதுபோன்றே பொறுப்பு கூறவேண்டிய அரசு என்னும் வகையில் எதுவித பெறுமதியுமற்ற பரப்புரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க முன்வருதல் வேண்டும்.

எதுவித அடிப்படையுமற்ற பரப்புரைகளுக்கு ஏமாற்றமடைய வேண்டாமெனவும், சூழலுக்கேற்ற விதத்திலும், அறிவுபூர்வமாகவும், திடீர் கோபத்திற்குள்ளாகி இரத்தம் சிந்துதல் மற்றும் உடமைகளை சேதப்படுத்தும் செயல்களை தவிர்க்குமாறும் அனைத்து குடிமக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். 

உள்ளுராட்சி தேர்தல் முடிவுபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தத்தமது கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்காது, நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி, நாடு சீர்கெட்டுப்போகாமலிருக்க வழிவகுப்பார்களென எதிர்பார்;க்கிறோம். முன்னாள் ஜனாதிபதி உட்பட எதிர்கொள்கையுடைய அரசியல் தலைவர்கள் பொறுப்புடனும், சந்தர்ப்பவாதிகளாயிராமல், மக்கள் நடுவில் முரண்பாடு தோற்றுவிக்கும் விதத்தில் செயல்படாதிருப்பார்களென நம்புகிறோம்.

நாம் பின்பற்றும் சமய நற்போதனைகளுக்கு அமைவாக வன்முறையற்றும், அன்பை பரவச்செய்கிறவர்களாகவும்  சமாதானம், ஒற்றுமையுணர்வுடனும் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தத்தமது சமய அடியவர்களை வழிநடத்தும்படி, நாங்கள் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இவ்வண்ணம்,


அதி. வண. அறிவர். இத்தபான தம்மலங்கார மகாநாயக்க தேரர்

அருட்திரு.டபிள்யு. பி. எபனேசர் ஜோசப் (இணை செயலாளர் நாயகம்)

அஷ் ஷைக் எம்.ஐ.எம். முபாரக் (அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா)

சிவஸ்ரீ கே.வி. கே. வைதீஸ்வரன் குருக்கள்

No comments

Powered by Blogger.