March 10, 2018

"முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பிக்குகளும், சிங்கவர்களும் செய்த உதவிகளை மறக்கமுடியாது"


முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­திகள் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்த சம­யங்­களில் பௌத்த பிக்­கு­களும் பெரும்­பான்­மை­யின சகோ­த­ரர்கள் சிலரும் பள்­ளி­வா­சல்­க­ளையும் முஸ்­லிம்­களின் உடை­மை­க­ளையும் முன்­னின்று பாது­காத்த சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. இதற்­க­மைய அவர்கள் பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்­லிம்­களின் வீடு­க­ளிலும் இர­வி­ர­வாக தங்­கி­யி­ருந்­துள்­ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, 

கண்டி திக­னயில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கண்டி மாவட்­டத்தில் குறிப்­பாக கண்டி, ஹாரிஸ்­பத்­துவ, குண்­ட­சாலை, பாத்த­தும்­பரை முத­லான பகு­தி­களில் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ராக இன­வா­தி­களால் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

இத்­தாக்­கு­தல்­களின் தொடர்ச்­சியால், கண்டி மாவட்ட முஸ்­லிம்கள் அச்­சத்தில் உறைந்­தி­ருந்த சந்­தர்ப்­பத்தில் மாவட்­டத்தில்  முஸ்லிம் பகு­தி­களில் பௌத்த பிக்­கு­மார்கள், பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள், பெரும்­பான்­மை­யின சகோ­த­ரர்கள் முன்­வந்து முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தமை பற்­றிய  பல தக­வல்­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.  

கடந்த செவ்­வாய்­கி­ழமை காலை 6 மணிக்கு கண்டி மாவட்­டத்தில் தளர்த்­தப்­பட்ட ஊர­டங்குச் சட்டம் அதே­தினம் முற்­பகல் 11 மணிக்கு அமுல்­ப­டுத்­தப்­ப­டட போது மக்கள் மத்­தியில் அச்சம், பீதி உட்­பட   பதற்­றமும் அதி­க­ரித்­தி­ருந்­தன. 

இச்­சந்­தர்ப்­பத்தில்  கெலி­ஓயா பகு­தியில்  பெரும்­பான்­மை­யின சகோ­த­ரர்கள் ஒலி­பெ­ருக்­கியில் கெலி­ஓயா பகு­தியில் சிங்­கள மொழியில் அறி­விப்பு செய்­தனர். இதில் இப்­பி­ர­தேச அர­சியல் பிர­மு­கர்­களும் பங்­கு­பற்­றினர் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த அறி­விப்பு பிர­தேச இன அமை­திக்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் பிர­தே­சத்தின் அமை­திக்கும் முஸ்­லிம்கள் மத்­தியில் நில­விய அச்சம் , பீதி மற்றும் பதற்­றத்தைக் குறைப்­ப­திலும் பெரும் பங்கு வகித்­த­துடன் பாராட்­டும்­ப­டி­யாக அமைந்­தி­ருந்­தது. 

கண்டி மாவட்­டத்தில் கம்­பளை மற்றும் நாவ­லப்­பிட்டி பகு­திகள் மிகவும் அமை­தி­யாகக் காணப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான  சம்­ப­வங்கள் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பர­வு­வ­தாக தகவல் கிடைத்­த­வுடன் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே உட­ன­டி­யாக தனது நாவ­லப்­பிட்டி பகு­தி­யி­லுள்ள முஸ்லிம் பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்தார். இப்­ப­குதி முஸ்­லிம்­களை பள்­ளி­வா­சல்­களில் சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் கூறி அச்­சத்தை போக்­கு­வதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­ட­தாக முஸ்­லிம்கள் தெரி­வித்­தனர்.  

மேலும்,  யடி­நு­வர தொகு­தியில் அமைந்­துள்ள தந்­துர கிரா­மத்தில் நூற்­றுக்கும் குறை­வான முஸ்லிம் குடும்­பங்கள் வசித்து வரும் நிலையில் அமை­தி­யற்ற நிலையால் இப்­ப­குதி மக்கள் மத்­தியில் பெரும் அச்சம் குடி­கொண்­டி­ருந்­தது. இத­னை­ய­றிந்து தந்­து­துரை முன்­வ­து­கொடை பகுதி பௌத்த விகா­ரை­களை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தந்­துரை பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தந்தும் மற்­று­மொரு பௌத்த பிக்கு முஸ்­லிம்­களை விகா­ரைக்கு  அழைத்தும் முஸ்­லிம்கள் பயப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாம் உங்­க­ளுடன் இருப்போம் என்று ஆறு­தல்­ப­டுத்­தி­யுள்­ளனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.  

இதேபோல் முறுத்­த­லாவ பகு­தியில் பௌத்த பிக்கு ஒருவர் முறுத்­த­லாவ நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் உடைமை­க­ளுக்கு சேதம்  இடம்­பெறக் கூடாது என்­பதில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்­டுள்­ள­தாக அப்­ப­குதி முஸ்­லிம்கள் தெரி­வித்­தனர். இவர், முறுத்­த­லாவ நகரில் இரவு வேளையில் கண்­வி­ழித்து பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.  

மேலும், கண்டி அல­தெ­னிய பகு­தியில் தக்­கியா ஒன்றை வெளிப்­பி­ர­தே­சத்தில் இருந்து வந்த கும்­ப­லொன்று தாக்க முற்­பட்ட போது அங்கு குழு­மிய பெரும்­பான்மை மக்கள் தாக்­கு­தல்­தா­ரர்­களை விரட்­டி­யடித்­ததா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும், கம்­பளை பகு­தியில் அச்ச நிலை தலை­தூக்­கு­வதைத் தடுக்கும் பொருட்டு கம்­பளை உட­ப­லாத்த பிர­தேச செய­ல­கத்தில் சிங்­கள மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், பிர­மு­கர்கள் கலந்து கொண்ட கூட்­ட­மொன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதில் பிர­தி­ய­மைச்சர் அநுராதா ஜயரட்ண மற்றும் கம்பளை நகர சபையின் முன்னாள் உப தலைவர் சமந்த அருணகுமார ஆகியோர் பங்குபற்றினர். இவர்கள் கம்பளையில் முஸ்லிம் பகுதிகளுக்கு சென்று முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டியதாகவும் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவங்கள் இடம்பெற்ற தினங்களில் பெருமளவிலான பெரும்பான்மையின சகோதரர்கள் முஸ்லிம்களை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தும் தமது வீடுகளில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-விடிவெள்ளி-

2 கருத்துரைகள்:

Thanks a million to thos who helped Muslim at the time of dangerous situations created by some individuals.

Is any UNP members done like this. If have please publish it.

Post a Comment