Header Ads



"அமைச்ச‌ர் ம‌னோவின், ம‌ழுப்ப‌ல்க‌ள் அர்த்த‌ம‌ற்றவை"

இஸ்லாமிய‌ பெய‌ர் கொண்ட‌ அடிப்ப‌டைவாதிக‌ள் அரேபிய‌ க‌லாசார‌ ஆடையை த‌விர்க்க‌ வேண்டும் என‌ இன‌வாதமாக‌ பேசிய‌ அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் த‌ன‌து பேச்சு த‌வ‌றான‌து என்ப‌தை ஏற்றுக்கொள்ளாம‌ல் முஸ்லிம்க‌ள் அர‌சுக்கு சார்பாக‌ ஜெனீவா போனார்க‌ள், அர‌சுக்கு சார்பாக‌ கொழும்பில் ஆர்ப்பாட்ட‌ம் செய்தார்க‌ள் என‌ ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் எதையெதையோ எழுதியுள்ளார்.

அண்மைய‌ ம‌னோவின் க‌ருத்தின் மூல‌ம் அவ‌ர் இன‌வாத‌ சிந்த‌னை கொண்ட‌வ‌ர் என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ம் தெரிந்துகொண்டு கார‌சார‌மாக‌ முஸ்லிம்க‌ள் அவ‌ரை சாடின‌ர். இத‌ற்கு ப‌தில‌ளித்த‌ அமைச்ச‌ர் ம‌னோ மேற்க‌ண்ட‌வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ கால‌த்தில் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்த‌மைக்கும் இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாதிக‌ளின் ஆடைக்க‌லாசார‌த்திற்கும் என்ன‌ தொட‌ர்பு உண்டு என்று கூட‌ புரியாம‌ல் பேசுவ‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ உள்ள‌து.

ம‌ஹிந்த‌ கால‌த்தில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும் அர‌சாங்க‌த்தில் இருந்த‌தால் இராணுவ‌த்துக்கெதிரான‌ ஜெனீவா பிரேர‌ணைக்கெதிராக‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் ஏற்பாட்டில் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர். அதே வேளை த‌ம்புள்ள‌ ப‌ள்ளிமீதான‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ தாக்குத‌ல் காரண‌மாக‌ ம‌ஹிந்த‌ அர‌சிலிருந்து வெளியேறிய‌ உல‌மா க‌ட்சி ஜெனிவா விட‌ய‌த்தில் அர‌சுக்கு சார்பாக‌ முஸ்லிம்க‌ள் ந‌ட‌ப்ப‌தை எதிர்த்த‌மை ம‌னோவுக்கு தெரியாதா?

பொதுவாக‌ முஸ்லிம்க‌ளோ த‌மிழ‌ர்க‌ளோ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்தால் முழுக்க‌ முழுக்க‌ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌வே இருப்ப‌ர். ம‌ஹிந்த‌ அர‌சில் தொண்ட‌மான், க‌ருணா போன்ற‌வ‌ர்க‌ள் ஜெனீவா விட‌ய‌த்தில் அர‌சுக்கு சார்பாக‌வே இருந்த‌ன‌ர். இப்போதைய‌ அர‌சில் அமைச்ச‌ராக‌ இருக்கும் ம‌னோ க‌ணேச‌னும் அர‌சுக்கு சார்பாக‌வே இருக்கிறார். அத‌னால்த்தான் க‌ண்டிக்க‌ல‌வ‌ர‌த்துக்கு அர‌சாங்க‌ம் பொறுப்பு என‌ கூறாம‌ல் முஸ்லிம் அடிப்ப‌டை வாத‌த்தை கூறி அர‌சை திருப்திப்ப‌டுத்த‌ முணைந்துள்ளார்.

ஆக‌வே அமைச்ச‌ர் ம‌னோவின் ம‌ழுப்ப‌ல்க‌ள் அர்த்த‌ம‌ற்றவை என்ப‌துட‌ன் முஸ்லிம் அடிப்ப‌டைவாதி என்று எவ‌ரும் இல்லை என்ப‌தையும் அவ‌ர் ஏற்று த‌ன‌து க‌ருத்துக்காக‌ ம‌ன்னிப்பு கேட்ப‌தே முறையான‌தாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

5 comments:

  1. உண்மையை சொன்னால் குற்றமா?.
    பின்னர் அதற்கான விளக்கத்தையும் மிகத்தெளிவாக மனோ சார் தந்துள்ளார்.

    Dear உல்மா சார், இப்போது கூட, 21 முஸலிம் MP களுமே அரசின் “முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வளர்ச்சி” எனும்கருத்தை ஆதரிக்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் “இல்லை” என அடம் பிடிக்குறீர்கள். நீங்கள் பாவம் சார், ஒன்றுமே புரிவதில்லை.

    ReplyDelete
  2. மனோ என்ற மனோவியாதி பிடித்தவனுக்கெல்லாம், சக வாழ்வு, இன நல்லிணக்கம் என்ற அமைச்சர் பதவி கொடுத்து, அழகு பார்க்கிறது இந்த அரசாங்கம்.

    எத்தனையோ நல்லெண்ணம் கொண்ட சிங்கள எம்பிமார் இருக்கிறார்கள்.

    தமிழ்க் கூட்டமைப்பிலும் நல்லெண்ணம் கொண்ட எம்பிமார் இருக்கிறார்கள்.

    மனோவின் பதவியைப் பிடுங்கி, ஒரு சிங்களவருக்கோ அல்லது இன்னொரு தமிழருக்கோ கொடுக்குமாறு, அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. We condemne Manor's foolish statements and you are also responsible for the recent riots against Muslims as you are too in the current government.
    As a minority representative, Mano should be wise and neutral as it may happen tomorrow against Hindus.

    ReplyDelete
  4. No Community will achieve its peace and success by suppressing another community unjustly. This is because the creator of all of us is the final judge of all these events. He will be just-full in rewarding oppressed and punishing the violators soon or later.

    Those who respect humanity.. will not be opportunist to enjoy and act racist way for a even single moment and then call them self they are working for peace.

    This message is for all people from, Sinhale, Hindu, Muslim or Christians.

    Be Human and Think Humanly and stop talking racism and acting racist way, if you are really a peace willing person.

    Let us build this land together.

    ReplyDelete
  5. மனோ கணேசனுக்கு இது பற்றி கூற அருகதையில்லை என்பது உண்மையே. ஆனால் அதற்காக அவர் குறிப்பிட்ட விடயம் உண்மை என்பதில் சந்தேகமுமில்லை.

    இலங்கையரான நமக்கு நமது மத அடையாளங்கள்தான் தேவையேயன்றி அரேபிய கலாசாரமல்ல. உதாரணத்திற்கு சாதாரண சேலையைக்கூட நமது முன்னைய முஸ்லீம் தாய்மார்கள் முகம், மணிக்கட்டு பாதங்கள் தவிர முழு உடலையும் மறைக்கும் வகையில் உடுத்தினார்கள். ஆண்கள் சாரம் சேட்டை வைத்து மார்க்கத்திற்கு அவசியமான வகையில் உடலை மறைத்து உடுத்தினார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.