Header Ads



இலங்கை முஸ்லிம்களை, அழிக்கும் அஜன்டாக்கள்

"வரலாரற்ற  சமூகம்  வாழத் தகுதியற்றது"... .....

பாதுகாக்கப்பட வேண்டிய  இலங்கை முஸ்லிம்  பாரம்பரியம்....

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்களை விட தமது வரலாற்றிலும், பாரம்பரியத்திலும் சற்றும் குறைவானவர்கள் அல்ல, உலகில் தோன்றிய முதல் மனிதனும்,முஸ்லிம்கள் நம்பும் முதல் நபியுமான "ஆதம் நபி வாழ்ந்த வரலாற்றைக் கொண்டவர்கள் இலங்கை முஸ்லிம்கள், 
ஆனால் அவற்றைப் பாதுகாப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் இவர்களைவிட கவனயீனமானவர்களை  உலகில் எங்கும் காணமுடியாது, 

ஒரு நாடாயினும், சமூகமாயினும் தமது கடந்தகால வரலாறுகளையும், இயற்கை வாழிடங்களையும் பாதுகாத்து தமது எதிர்கால  
சந்த்தியினருக்கு  கையளிக்க வேண்டியது கட்டாயமானதாகும், இது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் காணப்படும் சாதாரண பண்பாகும். ஆனால் இந்நாட்டு முஸ்லிம்களிடம் இது குறைவாகக் காணப்படுவது மிகவும் கவலையான ஒன்று.

....*இலங்கையில் முஸ்லிம் தொல்லியல் இல்லையா???

இலங்கையில் முஸ்லிம்களின்  கலாசாரம், சமய தலங்கள், வாழ்விடங்கள் போதுமான அளவு உள்ளன. ஆனால் அவை முறையாக  முஸ்லிம்களினாலேயே பராமரிக்கப்படுவதில்லை, அதற்கான காரணங்கள்....

1)அவற்றின் "பெறுமானம்" தொடர்பான போதிய அறிவு அவர்களிடம் காணப்படுவதில்லை .

2) சமயம் சார் இயக்கங்களின் மறைமுக புராதன தொல்லியல் "அழிப்பு அஜண்டா" 
இதில் சவூதிய  சிந்தனை சார் இயக்கங்கள் தீவிரமாகச்
செயற்படுகின்றன.

இவ்வாறான இன்னும் பல காரணங்களாலும் , ஏனையவர்களாலும் எமது புராதனமும் , வாழ்வியலும் அழிக்கப்படுகின்றன

....*இனமு(ர)றண்பாடும், தொல்லியல் அறிவும்.*.

ஒரு சமூகத்தைப் பலமாக்கவும், பலவீனப்படுத்தவும் புராதன வரலாறுகளும், சான்றகளும் மிக முக்கியமானவையாகும். 

உ+ம்.சிங்களவர்கள் தாம் சிங்கத்தில் இருந்து தோன்றிய நம்பிக்கையையே தமது வீரத்தின் அடிப்படையாக்கி உள்ளனர்.
இந்த மரபுரீதியான வரலாற்றையும், தமது புராதன தொல்லியல் இடங்கள் பற்றிய அறிவையும் இளம் தலைமுறையினருக்கு வழங்குவதில் பிக்குகளும், பன்சலை களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த , தமது எதிர்கால சந்ததியினர் வாழப்போகின்ற நாட்டில் தமது பாரம்பரியம் தொடர்பான பலவீனமான அறிவையும், செயற்பாட்டையும் கொண்டிருப்பதனால் உளவியல் ரீதியாகவும், பௌதிக ரீதியாகவும் பின்னோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த திட்டமிட்ட நடவடிக்கை  இன்னும் அதிகரிக்குமே தவிர குறைவடையும் என எதிர்பார்க்க முடியாது. 

....*முஸ்லிம்களின் புராதனங்கள் எவை?

இலங்கையில் முஸ்லிம் வரலாற்றோடு தொடர்புட்ட ,இடங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள், சியாறங்கள், முஸ்லிம்கள்  பயன்படுத்திய தனித்துவமான ஆடைகள், பாத்திரங்கள், தொழில்உபகரணஙகள், திருமண, விழாக்கால பாடல்கள், கொடிகள்,விளக்குகள், நாணயங்கள், இலக்கிய ஆவணங்கள்,அறபுத்தமிழ் ,எழுத்தணிஓவியங்கள், மீஷான் கட்டைகள், புராதமையவாடிகள்  ...
போன்ற அனைத்தும் முஸ்லிம் புராதனங்களே இவை  இயக்க வேறுபாடுகளின்றி கட்டாயம் பாதுகாக்கப்பபட வேண்டியது இன்றய இலங்கை முஸ்லிம்களின் "இருப்புடன் " தொடர்புபட்டதாகும்.

...*பாதுகாப்பதில் உள்ள சவால்கள்......

1).இலங்கைக்கே உரித்தான முஸ்லிம் கலாசார அம்சங்களைப் பறம்தள்ளிய ஏனைய நாடுகளின் கலாசார ஊடுருவல் சமய இயக்கங்களும், அவற்றின் அடிப்படைவாத அழிப்புச் செயற்பாடுகளும், 

2). சமுகம்சார் கலாசார வாழ்வியல் அம்சங்களை , அவற்றின் பார்வையில் இருந்து நோக்குவதைத் தவிர்த்து  தீவிர சமய இயக்க மன நிலை யில், நோக்குதல், விமர்சித்து புறக்கணித்தல்.

3) அரச தொல்லியல்  ஆய்வுப் பணிகளில் சிறுபான்மையினரின் சான்றுகள் கவனத்தில் கொள்ளப்படாமை. 

போன்றனவே,இவற்றைப் பாதுகாப்பதற்கான சவால்களாகும், 

....எதிர்கால நடவடிக்கைகள்......

1), தற்போது எஞ்சியுள்ள அனைத்து  முஸ்லிம் தொல்லியல் அம்சங்களையும்  பாதுகாப்பதோடு, அவற்றை இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் கீழ் முறையாகப் பதிவு செய்தல்.

2).இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால்,சமய வராற்று சான்றுகளைப் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் முஸ்லிம் இயக்கவாதிகள் ஒன்றுபடல்.

3). புராதனம், தொல்பொருட்கள் தொடர்பான  கருத்தரங்குகளை,  மவ்லவிமார்களுக்கும், சமூக செயற்பாட்டளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்தல்.

4). தென்கிழக்குப் பல்கலைக்கழக்தில் "தொல்லியல் துறை, (Department), or தொல்லியல் பீடத்தை (Faculty) ஒன்றை அமைக்க ஆவணை செய்தல்.

5). முஸ்லிம்களின் குடும்ப மற்றும் பொதுச் சுற்றுலாக்களை புராதன இடங்களை நோக்கிய பயணங்களாக அமைத்துக் கொள்ளல், பள்ளிவாசல்கள் அவற்அவற்றிற்கு உதவி புரிதல்.
உ+ம்.  ஆதம்மலை ,பேருவளை, காலி, ஜெய்லானி.

6).இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் தலைவர்கள் வாழ்ந்த வீடுகள், கிராமங்கள் போன்றவற்றை பாதுகாப்பதுடன், அவர்களால் நாட்டில் புரியப்  பட்டசாதனைகள், நன்கொடைகள், பங்களிப்புக்கள் என்பனவற்றை நினைவு கூறல், 
உ+ம். .. அறிஞர்சித்திலெப்பையின் வீடு, பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு நீதவான் அக்பர் அன்பளிப்புச் செய்த காணி,. 

7) புதிய, ஆய்வாளர்களையும், ஆய்வுப் பிரசேசங்களையும் , உள்வாங்கிய ஒரு குழு, தலைசிறந்த ,வரலாற்று ஆய்வாளர்களின் வழிகாட்டலில் செயற்படல்
உ+ம்... பேராசிரியர் அனஸ், கலாநிதி ஷுக்ரி, 

9). முஸ்லிம் கள் தொடர்பான நூதன சாலைகளை  மாகாண மட்டங்களிலும், தேசிய ரீதியாகவும்  அமைத்தல்
உ+ம்.. காத்தான்குடியில் உள்ள அமைச்சர் ஹிஸ்புள்ளாவால் அமைக்கப்பட்ட நூதன சாலை சிறந்த உதாரணம்.

10) முஸ்லிம் கலாசார அமைச்சும், திணைக்களமும் வரலாறு, தொல்லியல் தொடர்பான விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்படல்.

மேற்படி விடயங்களில் இலங்கை வாழ் முஸ்லிம் சமுகமும், அரசியல் தலைவர்களும்  சமயத்தலைவர்களும் ஒன்றித்து செயற்படவேண்டிய "கட்டாய " நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதைவிடுத்து தற்காலிகமாக தம்மை பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம்கள் முயல்வதானது,

" உடலில் உள்ள புண்ணுக்கு உடுப்பை மாற்றுவது" போன்றதாகவே அமையும்.

முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர் - மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்.

No comments

Powered by Blogger.