Header Ads



"ஞானசாரர் மீது சட்டத்தரணி, பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக முறைப்பாடு"

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலும் சட்டத்தரணி தொழிலுக்கு பொருந்தாத வகையிலும் செயற்பட்டதாக தெரிவித்து சட்டத்தரணி அஜித் பிரசன்ன தொடர்பில் பக்கச்சார்பற்றதும், மிகப் பொருத்தமானதுமான விசாரணையொன்றை நடாத்துமாறு உயர் நீதிமன்ற நீதியரசருக்கும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் எழுத்து மூலம் முறைப்பாடொன்றை இன்று (15) பொதுபல சேனா முன்வைத்துள்ளது.

பொதுபல சேனாவின் சார்பில் பஸ்ஸரமுல்லை பஞ்ஞாசோதி தேரர் இந்த முறைப்பாட்டை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் அவசரகால நிலைமை நடைமுறையிலுள்ள நிலையில், குறித்த சட்டத்தரணி கடந்த 5 ஆம் திகதியும் 8 ஆம் திகதியும் இணையத்தளத்துக்கு வீடியோ காட்சியொன்றை வெளியிடுவதன் ஊடாக பொதுபல சேனாவின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்டத்தரணி வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் மனித உரிமைகளை மீறும் வகையில் அச்சுறுத்துதல், நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்ற கருத்தை சமூக மயப்படுத்த முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை தேரரின் மீது சுமத்த முயற்சித்துள்ளார்.

எந்தவொரு நபரும் நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்படும் வரையில் அவர் சட்டத்தில் நிரபராதியாகவே கருத்தப்படுகின்றார். இந்த நடைமுறையைப் பின்பற்றுதல் சட்டத்தரணியின் தார்மீகப் பொறுப்பாகும்.

ஞானசார தேரரரோ கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற எந்தவொரு இனவாத பிரச்சினைகளுக்காகவும் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக கருதப்படவில்லை. இது இவ்வாறிருக்கையில், குறித்த சட்டத்தரணி தேரர் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் பொதுபல சேனா சுட்டிக்காட்டியுள்ளது. 

1 comment:

Powered by Blogger.