Header Ads



ஜனாதிபதியின் திட்டத்தில், முஸ்லிம் ஆளுநருக்கு இடமில்லை

மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன்இ மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையிலுள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர்.

இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும்இ மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்இ

தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும்இ மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும்இ வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும்இ வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளைஇ ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறியமுடிந்தது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன  தெரிவான பின்னர் இதுகாலவரையும் முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. முஸ்லிம் என மார்தட்டிக் கொண்டு செயற்பட்ட மூனுசிலிீம் முதலமைச்சர் காட்டிய முன்மாதிரி அத்தகைய தீர்மானத்துக்கு வழிகோலியிருக்கும்

    ReplyDelete
  2. கிழக்கிலும் தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். கிழக்கில் சுமார் சனத்தொகையில் அதிகமாக வாழும் தமிழர்களை கருத்தில் கொண்டு. (40% except 200 000 of eastern tamil refugees)

    ReplyDelete
  3. கிழக்கில் சிறுபான்மை தமிழர்களுக்காக தமிழ் ஆளுநரை வழங்குவதானது வட கிழக்கு தமிழ் ஈழ உருவாக்கத்திற்கு இலகுவாகிவிடும்

    ReplyDelete
  4. @Gtx,
    கிழக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மை.2012 census இல் மட்டுமல்ல இனிவரும் 2022, 2032, etc.. யிலும் தமிழர்களை தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். பகல் கனவு காணாதீர்கள். முஸ்லீம் தேசியவாதம் ஒருபோதும் கிழக்கில் மட்டுமல்ல இலங்கையின் எந்தவொரு முலையிலும் எடுபடாது. ஏனெனில் அவர்களுக்கான தொடர் நிலப்பரப்பு அற்றது தான் காரணம். கிழக்கிலே மாத்திரம் அதிக பட்சமாக 12% காணி உரிமை.
    எனவே நீங்கள் கூறிய கருத்து பிழையானது. தமிழ் ஆளுநர் வாய்ப்பு கிழக்கிலே மித அதிகம். ஏனெனில் 40% சனத்தொகை மற்றும் 40% தொடர்ச்சியான நில உரிமை. வேறு இனங்களால் விழுங்கப்படுவது மிகவும் கடினம்.

    ReplyDelete

Powered by Blogger.