Header Ads



அமைச்சரவையில் ராஜிதவும், சம்பிக்கவும் வலியுறுத்திய விடயம்

கூட்டு எதிரணியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு அமைச்சர்களும் துணைபோகக்கூடாதென அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், ராஜித சேனாரத்னவும் சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் கூடியது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அவ்வேளையில் பிரதமருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் அமைச்சர்கள் ஆதரிக்கக்கூடாது என்றும், ஆட்சிக் கவிழ்ப்பே எதிரணியின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது என்றும் சம்பிக்கவும், ராஜிதவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரித்தால் நாளை சபாநாயகரைக்கூட மாற்றச் சொல்வார்கள்.

எனவே, மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் 2020ஆம் ஆண்டுவரை தேசிய அரசை தொடர்ந்தும் கொண்டுசெல்வதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இதற்குப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.