Header Ads



"மோதலான நிலைமைகளுக்கு, காரணம் அரசாங்கம்தான்" - துமிந்த

நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தியமை மோதலான நிலைமைகளுக்கு காரணம் எனவும் வழங்கிய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போது அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த தவறியமை தவறு எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று -08- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரம், ஜனநாயகத்தை வழங்குவது போல், அதனை எவரும் தவறாக பயன்படுத்தும் போது அதனை கட்டுப்படுத்துவதும் நல்லாட்சியே.

அரசாங்கம் சிங்கள மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை எனவும் நாட்டை பிளவுபடுத்த போவதாகவும் படையினரை வேட்டையாடுவதாகவும் சிலர் கூட்டங்களில் கூறும் போது அவற்றை நிறுத்தவும் தெளிவுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தீயை ஏற்படுத்திய சிலர் அதனை அனைக்க உதவுவதாக கூறினாலும் அவர்கள் அதனை நேர்மையாக கூறுகின்றனரா என்பது கேள்விக்குரியது.

மோதல்களை ஏற்படுத்துவதில் சம்பந்தப்பட்டவர்கள் இன, கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்படும் போது இனத்தை அடிப்படையாக கொண்டு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. He is givng a statement like my3, You are also a part of the government

    ReplyDelete
  2. இது போன்ற அடிநுனி இல்லாத தலையும் சிந்தனா சக்தியுமற்வர்களின் செய்திகளைப் பிரசுரித்து வாசகர்களின் தலையைத் திருகிவிடாதீர்கள் என பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.