Header Ads



ரணில் தைரியமில்லாதவர், அம்பாறைக்கு வராமை ஏமாற்றம் தருகிறது - ஹரீஸ்

-ஏ.ஏ. மெஹமட் அன்ஸிர்-

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர்பில்  வீரத்துடன் செயற்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தையரிமற்று காணப்படுவதாக குற்றம்சுமத்திய பிரதயிமைச்சர் ஹரீஸ், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருவதாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அம்பாறை வன்முறை பற்றி ஆராயும் கூட்டம் இன்று (04) ஓலுவில் துறைமுக சுற்றுலா விடுதியிலேயே நடைபெற்றது.  அம்பாறையில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றது. அப்படியிருக்க ஏன் ஒலுவில் பகுதியில் கூட்டத்ம் நடத்தினார்கள் என்பது விசித்திரமாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பார்வையிடாமல் பிரதமரை தடுத்ததில், மாவட்ட அமைச்சர் தயாமககேயின் பங்களிப்பு உள்ளது. இதன்மூலம் பிரதமர் தைரியமில்லாதவர் என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் அம்பாறை சென்று வன்முறைப் பகுதிகளை பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது.

அதேவேளை பிரதமருக்கு சொல்ல வேண்டியதை நாங்கள் தெளிவாக சொல்லியுள்ளோம்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதென பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.

விரைவில் நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார் எனவும் ஹரீஸ்  மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. அப்போ இத்தகுமுதல் நடந்த வன்செயல்களுக்கு அதாவது beruwela, Gintota இவைகளுக்கு நஷ்டயீடு வழங்கி முடிந்தா கௌரவ அமைச்சரே!

    இப்படியே சொல்லிச்சொல்லி உங்கள் அரசியலை நடத்துங்கள். உங்கள் சாணக்கியம் இருக்கும்வரைக்கும் கிழக்குக்கோ, முஸ்லிம்களுக்கோ எவ்விதமான விமோசனம் கிடைககிடைக்கப்போவதில்லை.
    ரணிலோ மைத்திரியோ எதுவும் செய்யமாட்டார்களென்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.இருந்தும் நீங்களும் உங்கள் சாணக்கிய கட்சிக்காரர்களும்தான் படம் காட்டுகிறீர்கள்.

    இனியாவது கொஞ்சம் விளங்குங்கள் நமது சமூஹத்திக்கு உங்களாலும் உங்கள் தலைவராலும் கட்சியாலும் எதுவுமே செய்யமுடியதன்று

    ReplyDelete

Powered by Blogger.