Header Ads



குரு­ணாகல் மத்­ரஸா மீது கல்­வீச்சு தாக்­குதல்

குரு­ணாகல் மாவட்டம், கொக்க­ரல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெல்­சி­றி­புர பகு­தியில் அமைந்­துள்ள அரபுக் கல்­லூரி (மத்­ரஸா) ஒன்றின் மீது அடை­யாளம்  தெரி­யாதோர் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இச்­சம்­பவம் நேற்று அதி­காலை வேளையில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் இருவர் இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­டு­விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 மெல்­சி­ரி­புர, மாயி­வல பகு­தியில் மெல்­சி­ரி­புர -  தித்­தெ­னிய வீதியை அண்­மித்து அமைந்­துள்ள மத்­ரஸா மீதே இந்த கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. குறித்த தாக்­குதல் கார­ண­மாக மத்­ர­ஸாவின் கணினி அறைக்கு பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த அறையின் கண்­ணா­டிகள் உள்­ளிட்­டவை நொருங்­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

 சம்­பவம் தொடர்பில் வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிரி குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய குரு­ணாகல் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­த­னவின் மேற்­பார்­வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர்  சமன் பீ ரத்­நா­யக்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய கொக­ரல்ல பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 தாக்­கு­தலை நடத்­தியோர் வந்­த­த­தாக கூறப்­படும் மோட்டார் சைக்­கிளை மையப்­ப­டுத்தி தற்­போ­தைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சந்தேக நபர்களை விரைவில் கைது செய்ய ,முடியும் என நம்புவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.