Header Ads



"இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது"

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதனால் நாடு ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுக்க வேண்டியுள்ளது.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹரகமையில் இன்று -16-  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பபிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை முன்னெடுக்க முடியாதுபோயுள்ளது. 

நாட்டு மக்கள் தற்போது பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதார ரீதியில் பெரும் சவாலை சந்திக்கின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினர். எனினும் அவை எதனையும் நிறைவேற்ற முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

அதனை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துகொண்டுள்ளனர். அதனாலேயே கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர். அரசாங்கம் நாட்டையும் மக்களையும் கருத்தில்கொண்டு வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதனைவிடுத்து வேறு விதமான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைத்திட்டங்களை முன்வைக்கக்கூடாது. 

மேலும் நல்லாட்சி அரசாங்கமானது தமது  குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு சில உபாயங்களைக் கையாழ்கிறது. பிரச்சினையொன்று மோலோங்கி அது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுகின்றபோது அதனை மூடி மறைப்பதற்கு  வேறு பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. You also created a Greasman problem when you were in power, don't forget Mr.Mahinda.

    ReplyDelete
  2. முதுகெலும்பற்ற காற்றுப்போன இரண்டு சில்லுகளை விட, முதுகெலும்புள்ள மஹிந்த போன்ற ஒரு தலைவனே நாட்டுக்குத் தேவை என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  3. Yaka palana better then your chinthana

    ReplyDelete
  4. If you come to the power
    You willstart long plan to destroy
    Our muslim ummah.

    ReplyDelete

Powered by Blogger.