Header Ads



அமைச்சரவை மாற்றத்தில், கண்ணீர்வடித்த மைத்திரி - போட்டுடைத்த ராஜித

கடந்த 2010ம் ஆண்டு அமைச்சரவையில் மைத்திரி சுகாதார அமைச்சை ஏற்க மனமின்றி கண்ணீர் வடித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இத்தகவலை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அமைச்சர் ராஜித, 2010ம் ஆண்டு அமைச்சரவை நியமனத்தின் போது எனக்கு மீன்பிடி அமைச்சு கிடைத்திருந்தது. அதில் எனக்கு அறவே விருப்பமிருக்கவில்லை.

அதேபோன்று சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்க அன்றைய அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் விருப்பமிருக்கவில்லை.அவர் கலங்கிய கண்களுடன் காணப்பட்டார். மறுபுறத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜோன் செனவிரத்ன உள்ளிட்டவர்களும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே காணப்பட்டனர். எவருமே தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அமைச்சுப் பதவி குறித்து திருப்தியுடன் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் அனைவருமே எனக்கு சிறந்த அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வாழ்த்தினார்கள். அதுபோன்றே ஒவ்வொரு அமைச்சரவை மாற்றத்தின் ​போதும் ஒருசிலர் ஏமாற்றமடைவது நடக்கவேசெய்யும். எதிர்பார்த்தது கிடைக்காமல் போனால் அந்த ஏமாற்றத்தை சிலரால் தாங்கிக் கொள்ள முடியாது. அமைச்சரவை மாற்றங்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்தவன் என்ற வகையில் அந்த அனுபவம் எனக்குண்டு என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.