Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை, சோடித்தவன் சிக்கினான்

இனவாதத்தை தூண்டும் விதத்தில் பொய்யான சம்பவமொன்றைச் சோடித்து பொலிஸ் அதிகாரிகளை தவறாக வழிநடாத்த முயற்சித்த தெளியாகொன்ன பிரதேசவாசி ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக  குருணாகல பொலிஸ் தலைமையக நிலையப் பொறுப்பதிகாரியும் பரிசோதகருமான மங்கள விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 02 ஆம் திகதி தெளியாகொன்ன பிரதேசத்தில் தான் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முஸ்லிம் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளானதாகவும் இதன்போது தன்னிடமிருந்த 35 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை உடைத்துப் போட்டதாகவும் தன்னைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் தெரிவித்து குறித்த சந்தேகநபர் குருணாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் குருணாகல போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும், இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இவரின் மூலமாகவே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.

இவர் இந்த சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் விதத்தில் சோடித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தொடர்பான சகல தகவல்களையும் வைத்து அரச அதிகாரிகளை தவறாக வழிநடாத்த முயற்சித்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவுள்ளதாகவும் குருணாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DC

No comments

Powered by Blogger.