Header Ads



மத தலங்களில் உச்ச தொனியில், ஒலி பெருக்கி பாவித்தால் சட்ட நடவடிக்கை.

மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனைகள் காணப்படுவதாக பல முறைபாடுகள் கிடைக்க பெற்று உள்ளனனால் வயதானவர்கள் , மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறியதாகவும் இனி அவ்வாறு உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனை இருந்தால் அது தொடர்பில் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளதாகவும் அவர் என தெரிவித்தார்.

4 comments:

  1. நாட்டின் சகல மதஸ்தானங்களிலும் ஒலிபெருக்கின் மூலம் மதஸ்தானங்களை பிரச்சாரம் சத்தம் போட்டு வெளியே பேசுவது தடை செய்ய வேண்டும்.கொஞ்சம் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது காலையிலே காது வெடிக்கிற போல மதஸ்தானங்களில் இருந்து வார சத்தம் மரண வேதனைக்கும் விட பொறுக்க முடியாது.

    ReplyDelete
  2. அனைத்து மத நிலையங்கள், வணக்க ஸ்தலங்களில் ஒலிபெருக்கிப் பாவனை முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. Very good idea. It should be not only in NPC but to be all over Sri Lanka, irrespective of any religious differences.

    ReplyDelete
  4. நீதியரசரிடம் இருந்து வரும் ஓர் நீதியான விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.