Header Ads



"வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றுபடுவோம் - எமது சகோதர, சகோதரிகளுக்கு கைகொடுப்போம்"

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில், எமது சகோதர, சகோதரிகளுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகள் அவர்களது வாழ்வாதாரங்களையும், இயல்பு வாழ்க்கையையும் கடுமையாக பாதித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவ் வன்முறையின் அடிப்படைக்கூறு இனத்துவேசமெனும் வக்கிரமும் lகளைந்தெறியப்பட வேண்டிய எண்ணமுமாகும். மேலும் இவ் வன்முறையின் போது சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பீடு இலங்கை ரூபாய்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகம் என்ற பெருந்தொகை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு கைகொடுப்பது எமது தலையாய கடமையாகும் என்பதைப் புரிந்து இனவாதத்துக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களது துயர்துடைக்கவும் எமது கரங்களை ஒன்றிணைப்போம். 

இதற்கமைவாக “இனவெறுப்புணர்வுக்கு எதிராகவும், எமது சகோதரர்களுக்கு உறுதுணையளிக்கவும் ஒன்றிணைவோம்” என்ற தொனியில் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் - கத்தார் (FSMA - QATAR) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.

திகதி: 16/03/2018 (வெள்ளிக்கிழமை)
நேரம்: 7:45 PM, 
இடம்: பனார் கேட்போர் கூடம்

No comments

Powered by Blogger.