Header Ads



கண்டிக்குப் போகாதீர்கள் - வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை

கண்டியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மேலும் சில நாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்யும் தங்களது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைக்கு பயணிக்கும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள், தங்களது பாதுகாப்பு தொடர்பில் மேலதிக அவதானத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட கண்டி பகுதிக்கு செல்வதானால் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் சிங்கபூரும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயக் செய்யும் சிங்கபூர் பிரஜைகள், முக்கிய காரணங்களுக்காக அன்றி கண்டிக்கு செல்ல வேண்டாம் என்று, சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகள் தங்களது நாட்டின் பிரஜைகளை இலங்கை வருகையில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. What next effect our country?Tourist industries will suffer in future then results hotels close so far hotels workers unemployed and goverment don´t get tax money.

    ReplyDelete

Powered by Blogger.