Header Ads



இலங்கையர்கள் இந்திய, அணிக்கு ஆதரவு - வம்பளக்கும் விமல்

இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கையர்கள் ஆதரவு வழங்கியமையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட கோஷங்கள் எட்கா உடன்படிக்கைகளுக்கு கைச்சாத்திட பயன்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுந்திர கிண்ண இறுதி போட்டி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கையர்கள் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஆதரவு வழங்கியமை தொடர்பில் விமல் வீரவன்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியில் வீரர்கள் சிலர் தவறாக நடந்து கொண்ட போதிலும், அவர்கள் இலங்கையின் அரசியல் அல்லது பொருளாதார ரீதியில் தலையிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இறுதிப்போட்டியின் போது இந்திய அணிக்கு இலங்கை ரகசியர்கள் பெருமளவு ஆதரவினை வழங்கியிருந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கை தேசிய கொடியை மைதானத்தில் ஏந்தியவாறு இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நடந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இது உண்மை தானே இந்தியாவுடன் எல்லை மீறிய அரசியல் உறவு தான் இந்த நாடு பல இனவாதா பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. 30 வருட பயங்கரவாத யுத்தத்தை புலி பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆரம்பித்து வைத்ததும் இந்தியா தான். இந்தியாவின் தலையீடு முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. “இந்திய-அமேரிக்க தலையீடு” இலங்கையின் மனித உரிமை முன்னேற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிக்கு தேவை.

    மிகமுக்கியமாக, இலங்கையில் பயங்கரவாத நாடான பாக்கிஷ்தானை எட்ட வைத்திருப்பதற்கும், ISIS பயங்கரவாதம் வளர்ச்சியை தடுப்பதற்கும் இந்தியா-மோடி, Usa ட்ரம் மிக அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.