Header Ads



கண்டி கலவரத்தினால் நிறுத்தப்பட்ட, ரணிலுக்கு எதிரான பிரேணை மீண்டும் வருகிறது

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்தது.

எனினும், கண்டியில் ஏற்பட்ட கலவரங்களினால், அந்தத் திட்டம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.