Header Ads



பள்ளிவாசலை தாக்கவந்தவரின், இறுதி ஊர்வலம் இன்று, (முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கவும்)

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறையில் முஸ்லிம்களை தாக்க  கொண்டுவந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்தநபரின் பூதவுடல் 09.03.2018 தகனம் செய்யப்படவுள்ளது. 

வெள்ளிக்கிழமை  முஸ்லிம்களுடைய ஜும்ஆ தினம் என்ற காரணத்தினாலும் மற்றும் பூதவூடல்தகனம் செய்யும் நேரத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படாத வாறும் நாளைவெள்ளிக்கிகழமை ஆறு மணியுடன் முடிவடையும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் ஒரு மணியுடன்அமுல் படுத்துமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்று முஸ்லிம் சமயம்கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித்மத்தும பண்டார ஆகிய இருவரிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சர்ஹலீம் இவ்வாறு இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இவ்வாறு உரிழந்த நபர் பூஜாப்பிட்டிய கலுவான பிரதேசத்தைச் சேர்ந்த குனரத்னஎன்பராவர். முல்லேகம பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையம் மற்றும்பள்ளிவாசலை இலக்கு வைத்து தாக்குதலுக்காக கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டுதானாக வெடித்தமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது . 

எனவே அவருடைய பூதவுடல் நாளை வெள்ளிக்கிழமை மூன்று மணி அளவில் தனகம்செய்யப்படவுள்ளது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படாத வகையில் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.