March 31, 2018

துரோகம் இழைத்த, கேடுகெட்ட கூட்டமா நாம்..?

ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் வரலாறு. அந்த வரலாறு எதிர்கால சந்ததிக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அந்த முன்மாதிரி நல்லதையும் ஏற்படுத்தும் . கெட்டதையும் ஏற்படுத்தும்.

இஸ்லாமிய வரலாறு இஸ்லாமியர் வரலாறு உங்கள் கண் முன்னே அழிக்கப்படுகிறதே ஏன்? என்பதை யோசிக்கா சமூகம் இது. 

பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினாலும் நூரில் ஒன்று என்று இதையும் கடந்து விட்டுத்தான் போகப்போகிறோம் .அதனால் நானும் நாள் குறிப்பிட்டு நேரம் குறிப்பிட்டு இடம் குறிப்பிட்டு ஆதாரம் கொண்டு கட்டுரை வடிக்க விரும்பவில்லை. 

ஒரு நாட்டின் குடிகள் அந்த நாட்டின் வரலாற்று சிறப்பை வைத்து மேலோங்கப்படும், சிறப்பிக்கபடும் . அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு அந்த சமூகம் அந்த சிறப்பை கடைப்பிடித்து பாதுகாத்து பாதுகாப்புடன் வாழும். 

இந்தியாவுக்கு இஸ்லாம் வந்த வரலாறும் , இலங்கைக்கு இஸ்லாம் வந்த வரலாறும் மறைக்கப்பட்டு வந்தவர்கள் மீது பழி பாடும் காரியம் அரச அனுசரனையுடன் திட்டமடலாய் அரங்கேருகிறது. 

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தொட்டு முஸ்லிம்கள் வாழ்க்கை முறையும் இஸ்லாமிய பரவல் முறையும் அழிக்கப்பட்டு திரிவு படுத்தப்பட்டு பாடப்புத்தகங்களாகவும் , சஞ்சிகையாகவும், காணொலியாகவும் , திரைப்படங்களாகவும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. 

இலங்கை முஸ்லிம்கள் வரலாறும் அவ்வாறே. திட்டமிட்டு இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய்கள் பரப்பப்படுகிறது. வரலாற்று சின்னங்கள் நொருக்கப்படுகிறது. வரலாறும் மாற்றப்பட்டு விட்டது. நேற்றைய இஸ்லாமிய சமூகம் துரோகிகள் என்றும் இன்றைய இஸ்லாமிய சமூகம் கேடு கெட்டவர்கள் என்றும் வரலாறு எழுதுகிறது புத்தகமாக ஆனாலும் பார்த்துக் கொண்டுள்ளோம்.

எம் முன்னோரின் சிறப்பை எம் கண் முன் மறைத்து எம்முன்னே நம்மீது பலி போட்டு அடிமையாக்கி அவன் கால் கீழ் வீழ்ந்து விட்டோம்.உண்மையா இல்லையா? நிகழ்கால நிகழ்விலே எம் மீது தவறில்லை என்று அறிந்தும் அடிமைப் பட்டுள்ளோமே நாளை இதே பழிதான் வரலாறாக எம் சமூகம் வாசிக்கும் .அன்று நம்மை விட அடிமையாய் வாழும்...

 இந்தக்கட்டுரையை வெரும் எழுத்தால் படிப்பதைக் கொண்டு இதன் உண்மைத் தண்மையும் விளைவும் நிச்சயம் உங்களுக்கு விளங்கப்போவதில்லை. இது தொடர்பான ஆய்வும் விளிப்புனர்வும் இன்னும் எம்மிடம் இல்லை. 

இஸ்லாத்தை அழிக்கும் சக்திகள் மீடியாவையும், ரானுவத்தையும், அறிவியலையும் , தொழில் நுட்பத்தையும் கையில் வைத்து எம்மை பூச்சி போல இலகுவாக நசுக்கி விட்டே வந்து கொண்டுள்ளது. இதில் ஒன்று கூட எம்மிடம் உருப்படியாக இல்லாமல் சிதைந்து போய் கிடக்கின்றோம்.

உன் தகப்பன் உத்தமன் என்னும் வரலாற்றுக் பதிலாய் அயோக்கியன் என்று எழுதினால் எவ்வளவு கொதிப்பாயோ அதையும் விட பாரதூரமான ஒன்று நம் கண் முன்னே திரை மறைவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது. நாம் விழித்துக் கொள்ளப்போவதில்லை என்பதை நான் அறிவேன். சமூகம் ஒன்றாகும் வரை ஒரு கருத்து பல சமூகத்தில் ஒன்றான கோசமாக மாறப் போவதில்லை.

எமது வரலாற்றை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இல்லையேல் வருங்கால சந்ததிக்கு பெரும் துரோகம் இழைத்த கேடுகெட்ட கூட்டமாகவே பிற்காலத்தில் வாசிக்கப்படுவோம்.

கோடியில் புரலும் முஸ்லிம் முதலைகள் உருப்படியாக சமூகத்தின் தேவை என்ன என்பதை உணராமல் இப்தாரிலும் பள்ளி கட்டுவதிலும் மூழ்கி போய் கிடக்கிறது. இந்த சமூகத்துக்கு தேவையானது எது என்பதை உணராத செயல் படுத்துவது எப்படி என்பதை உணராத ஒரு தலமை இல்லா சமூகம் அழிந்தே போகும். 

உன் முன்னோர் வரலாறு கொண்டு இன்று நீ மறைக்கப்படுகிறாய். உன் வரலாறு கொண்டு நாளை உன் சந்ததி அடிமையாகும் , நாளைய வரலாற்றை கொண்டு எங்கு செல்லுமோ....

நாம் வரலாறு படைக்கா விட்டாலும் வரலாறு படைத்த முன்னோர் வரலாற்றை பாதுகாத்து நாம் வரலாறு படைக்க வேண்டியுள்ளது.

S.Sifraj (madinah)

4 கருத்துரைகள்:

“தலைப்பு” துரதிஸ்டவசமான உண்மை.
எதிரிகளை நம்பலாம், துரோகிகளை நம்பமுடியாது. அதனால் தான், இப்போ சிங்களவர்கள் பயப்படுகிறாரகள்.

Sifraj,
பகலில் நல்லா தூங்கிவிட்டெழுந்து மனதில் பட்டதெல்லாம் ஒரு சாட்சியும் இல்லாமல் புழுகுவதெல்லாம் வரலாகாது. முதலில் நீங்கள் சுய நினைவுடன் கட்டுரை எழுதுங்கள். வர்த்தக நோக்கத்திற்க இலங்கை வந்தீர்கள் இலங்கையில் எந்த கரையோர மாவட்டத்தினுள்ளும் உங்களால் நுழைய முடியவில்லை. ஆனால் கிழக்கு மாகாண தமிழர்களின் அன்பினாலும் அரவணைப்பினாலும் அவர்களால் அவர்கள் மத்தியில் வியாபாரம் செய்ய அனுமதிகிக்கப்படீர்கள். அவ்வாறே கிழக்கு தமிழர்கள் தங்கள் குல பெண்களையும் தங்கள் மொழியையும் உங்களிடையே காலப்போக்கில் பகிர்ந்தர்கள். உடன் பிறவா சகோதரர்களை போல் தங்க இடங்களும் வசதிகளும் அக்கால கிழக்கை ஆண்ட தமிழ் குருமன்னர்களால் உங்களுக்கு வழங்கப்பட்டது. அனல் நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு திண்டவன் வீட்டுக்கு துரோகம் செய்த்ரீர்கள் இன்னும் செய்து கிண்டு வருகிண்றீர்கள். இது தான் உங்களுடைய வரலாறு. உங்களுக்கு வேணும் என்றால் சாட்சிகளை பகிரவும் தயார். சும்மா பொய்களை எழுதி வரலாறு கிரலாறு என உசுப்பிவிடும் வேலைகளை நிறுத்துங்கள்.

காலத்தின் த்ஹெவையான கட்டுரை ஆனால் யாருடையவும் காதில் விழுமா என்றுதான் சந்தேகம்.இச்சமுதாயத்துக்கு சீரான வரலாறு எது என்பதை அழுத்தம் திருத்தமாக அமைத்து வைக்க நாதி கிடையாது.நிகல்காலத்தையாவது என்ன வன்று புரியவைக்க நமக்கன்று ஒரு மீடியா கிடையாது.இத்தனை கூடிஸ்வரர்கள் நம்மவர்கள் இருந்தும் இன்னும் சிந்திக்க வில்லை நமக்கு ஒரு மீடியா தேவை என்பதை அடுத்தவனின் தொலைக்காச்சியில் சொல்லும் செய்தியை பார்த்துவிட்டு குறை கூறியே காலத்தை கழிக்கும் நம்மவர்கள்.தனக்கன்று ஒரு மீடியாவை அமைக்க மனம்தான் இன்னும் இல்லாமல் போனது மன வேதனைதான்.

anurathapura mavattathil palaiya bas tharippitathil sila kaavikalal siyaaram allikkappatta poothu mootha muslim arasiyal vathikal ethirpinai kattinar aanaal emathu samukkathin oru iyakkam mathiram aatharauv valakkiyathu.

Post a Comment