Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவின், விஷேட அறிக்கை

நேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிகளை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.

அசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதுமக்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

பிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

7 comments:

  1. Kevalama illaaa ungalukku...? Idiots!!!

    ReplyDelete
  2. You should also let us know what sort of self protection we have to take. A Muslim can't be a timid or retreating guy. So now we have to plan for our future safety.

    ReplyDelete
  3. Its easy to criticize, but folks like you will never understand what kinds of issues they have to deal with. So even if you guyz didn't support them just STOP criticizing them without any matured understanding.

    They are not Idiots, just go in front of a mirror & say it...

    ReplyDelete
  4. சகோதரர் நஸிர், உணர்ச்சி கொந்தளிப்பில் பேசாதீர்கள். இந்த பவுத்த பயங்கரவாதிகளுக்கு தேவயானதே எமது முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தி எதிர் வினை புரியவைப்பதே அவர்களின் உண்மையான நோக்கம். அதன் ஊடாக இலங்கை முஸ்லீம் பயங்கரவாதிகள் எனும் நாமம் சூட்டி தமிழர்களை எவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினார்களோ அதே பாணியில் எமது சமூகத்தையும் உண்டுபண்ணுவதற்காக செய்யப்படும் சூழ்ச்சிதான் இந்த இனக்கலவரம்கள். இதை நாம் புரிந்து கொண்டு அறிவுபூர்வமாக எதிர் கொண்டு முறியடிக்க வேண்டுமே தவிர உணர்ச்சி வசப்பட்டு எதிர் வினய் ஆற்றினால் அவர்களின் பணி மற்றும் குறிக்கோள் வெற்றி அடைந்து விடும். மற்றும் எமது சமுதாயம் இலங்கை முஸ்லீம் பயங்கரவாதிகள் எனும் போர்வையில் எமது அரச படைகளினால் சின்னா பின்ன மாக்கப்படும். எமது சகோதரர்கள் பயங்கரவாதிகள் என்னும் போர்வையில் சிறைப்பிடிக்கப்படுவார்கள், எமது பொருளாதாரம் முற்றாக அழிக்கப்படும், எமது இளைஞ்சர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சுட்டு கொல்லப்படுவார்கள், எமது சகோதரிகள் மானபங்கப்படுத்தப்படலாம். எவை எல்லாம் எமது சகோதர தமிழ் மக்களுக்கு நடந்ததோ அவை அனைத்தும் எமது சமூகத்துக்கு எதிராக எமது அரசால் எமது அரச படைகளால் நடாத்தப்படும் என்னும் யதார்த்தத்தை புரிந்து சிந்தித்து செயற்படுமாறு எமது மக்களை விழிப்புணர்வூட்டல் தற்போதைய காலத்தின் தேவை என்பதை எமது சமுதாய தலைவர்கள் புரிந்து கொண்டு சமூகத்தை வழிநடத்த வேண்டும்

    ReplyDelete
  5. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உலமா சபைக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

    மார்க்கரீதியாக இலங்கை முஸ்லீம்களின் தலைமையாக விளங்கும் நீங்கள் அறிக்கையோடு மட்டும் நின்று விடாது இன்னும் ஒரு படி மேற்சென்று நமது சமுதாயத்தின் இன்றைய பாதுகாப்புக்கும், வருங்கால இருப்புக்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

    உங்கள் உடனடி கவனத்துக்கு

    1. முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் அரசியல் கட்சி முக்கியஸ்த்தர்கள், முஸ்லீம் சமூக அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் எல்லோரையும் அவசரமாக அழைத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே அமைப்பாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துங்கள்.

    2. நாம் ஒற்றுமைப்பட்டால் மட்டுமே அரசாங்கத்தை நிரப்பந்திக்க முடியும் என்ற உணமையை உரத்துக்கூறி அவர்களை ஒருமித்த முடிவுகளை எடுக்க வையுங்கள்.

    3. இவ்வாறு சேர்ந்தவர்களைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.

    4. அந்த அமைப்பு அரசாங்க சந்திப்பு, ஊடக சந்திப்பு, மாற்றுமத அமைப்புக்கள் சந்திப்பு என்று ஏற்பாடு செய்து கலவரங்களை தடுக்கும் வழிவகைகளை முன்னெடுக்கட்டும்.

    ReplyDelete
  6. ACJU works as a part of government.
    They always try to keep Muslims from Reacting..

    In Digana and Theldeniya area they even agreed to close Masjids on Sunday and Monday.. That was hilarious, instead of request Police to provide protection they cowardly said OK to close masjids..

    ReplyDelete
  7. @ Mr. Waseem, yes you're right. But we have to understand when we encountered a situation something similar to this, there must be a practical way to overcome it. I am agree we must be patience & not to involve in any riots. But anyone come to our shop and destroying property we have to face it bravely.

    ReplyDelete

Powered by Blogger.