Header Ads



'மார்ச் - செப்டெம்பர் மாதங்களில், மக்களிடையே அமைதியின்மை - மைத்திரிபால

“வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் நியமனம் வழங்கப்படும்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 வேலையற்றபட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனமும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞான ஆய்வு உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (03)  நடைபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலணியொன்றினை உருவாக்க உள்ளேன்.

“இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவதற்காக முயற்சித்து வருகின்றோம்.

“மார்ச் அல்லது செப்டெம்பர் மாதமாகின்ற போது, இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சில நடவடிக்கையை கடும் போக்குவாதிகளும் தீவிரவாதிகளும் மேற்கொள்கின்றனர். இந்த நாட்டை சீரழிப்பதற்கு திட்டமிட்டு இவர்கள் செய்கின்றனர். இதில் மக்கள் கவனமாக பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

2 comments:

  1. Stop this Baila and Implement Law and order......

    ReplyDelete
  2. Yes... We stay silent..till racist break our masjids, shops and houses . You do not take action even after evidences are brought to you. Security officials safegaurd till the racist finish the job. Then release them soon.

    We keep silent this is all what you all need till we die..? is it?

    ReplyDelete

Powered by Blogger.