Header Ads



ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, அம்பாறை வன்முறையை கவனத்தில் எடுத்தது


அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள இனவாதிகள் மேற்கொண்ட வன்முறையை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி கவனத்திற்கு எடுத்துள்ளது.

அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, புனித அல்குர்ஆன் எரியூட்டப்பட்டமை,  பொருட்கள் சேதம் விளைவிக்கப்பட்டமை, முஸ்லிம்கள் தாக்கப்பட்டமை, அவர்களிடமிருந்து அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்று அதனை இனவாத நோக்குடன் பரவச்செய்தமை உள்ளிட்ட பல்வேறு ஆதாரபூர்வமான எழுத்துமூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் "Faculty of Peace" என்ற அமைப்பினரால் எழுத்து மூலமாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு உடனடியாகவே, எழுத்து மூலமாக பதில் வழங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர், 

"Faculty of Peace" அமைப்பு தங்களுக்கு  இதுபற்றிய தகவல்களை உடனடியாக அனுப்பியதற்கு நன்றி கூறியுள்ளதுடன், மேலும் இதுபற்றிய தகவல்களை திரட்டி வழங்குமாறும், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய கூட்டத்தொடரில் இதுபற்றி குரல் எழுப்ப தாம் தயாராவிருப்பதாகவும், அம்பாறையில் முஸ்லிம்களுக்கு  எதிராக நடந்த வன்முறையின்பால், தமது கவனத்தை உடனடியாக திருப்புவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளது.

1 comment:

Powered by Blogger.