Header Ads



BCAS கல்முனை வளாகத்தின், தொழில்துறைசார் விஜயம்


BCAS கல்முனை வளாகத்தின் BTEC Higher National Diploma in Computing and Systems Development (HND in CSD) மாணவர்கள் அண்மையில் மேற்கொண்ட தொழில்துறைசார் விஜயத்தின் (Industrial Visit) ஒரு அங்கமாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கும் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கணனி மென்பொருள் துறையில் முன்னோடியாக திகழும் Virtusa நிறுவனத்துக்கும் விஜயம் செய்தனர்.

மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறைசார்ந்த நேரடியான கள அனுபவத்தை வழங்குதல், அத்துறை சார்ந்தவர்களுடனான அறிமுகம் மற்றும் மாணவர்களை தொழில்ரீதியாக தயார் செய்தல் என்பன குறித்த விஜயத்தின் பிரதான நோக்கங்களாகும்.

குறித்த விஜயத்தில் BCAS கல்முனை வளாகத்தில் HND in CSD துறையில் கல்விகற்கின்ற சுமார் முப்பது மாணவர்கள் அடங்கலாக மாணவர்களுக்கு போதுமான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக சிரேஷ்ட விரிவுரையாளர்களான A.R.Mohamed Nizzad (BIT[UOM], MBA [SEUSL]) & Mr. K.Mohamed  Ishraque (BIT[UOM], M.Sc in IS [UCSC]) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறித்த விஜயத்தின்போது Virtusa நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு தலைப்புக்களிலான நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டதோடு தங்களுடைய சந்தேகங்களுக்குரிய தெளிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், Virtusa நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ அதிகாரிகளின் மாணவர்களுடனான கலந்துரையாடலில், எமது நிறுவனமானது தகுதியான மாணவர்களை உள்வாங்குவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களை, கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் பின்னர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் உற்சாகப்படுத்தினர். குறித்த விஜயத்தில் கலந்துகொண்ட பல மாணவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் Virtusa போன்ற ஒரு நிறுவனத்தில் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வது தமது இலக்காகும் என தெரிவித்தனர்.

குறித்த தொழில்துறைசார் விஜயமானது, BCAS கல்முனை வளாகத்தின், கணணித் திணைக்களத்தின் பல முயற்சிகளில் ஒன்றாகும். இதன் மற்றுமொரு அங்கமாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு (Research and Development Unit) நிறுவப்பட்டு BCAS கல்முனை வளாகத்தின் கணணித்துறை மாணவர்கள், தங்களுடைய கற்கைநெறிகளை பூர்த்திசெய்து வெளியேறும்போதே போதுமான செயற்திட்ட அனுபவத்துடன் (Project experience) வெளியேறிச் செல்வதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றமை இங்கே கல்விகற்கின்ற மாணவர்களுக்கு இன்னுமொரு வரப்பிரசாதமாகும்.

மேற்குறித்த விஜயத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய BCAS கல்முனை வளாக முகாமைத்துவம், அதன் ஊழியர்கள் மற்றும் Virtusa நிறுவனம், அதன் ஊழியர்கள், கலந்துகொண்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள்  அனைவருக்கும் BCAS கல்முனை வளாகத்தின் கணணித்திணைக்களமானது தனது  நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.


No comments

Powered by Blogger.