Header Ads



மெனிக்கேன்னயில் மட்டும், முஸ்லீம்களுக்கு 885 கோடி ரூபா நஷ்டம்


(அஷ்ரப் ஏ சமத்)

மெனிக்கேன்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும் கடந்த வார வன்முறையில்   முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகள், வாகனங்கள் வா்த்தக நிலையங்களின் நஸ்டம்   885 கோடி ருபா  என எமது அலுவலகத்தின் அதிகாரிகள் மதிப்பிட்டு அறிக்கை சமா்ப்பித்துள்ளதாக  பிரதேச செயலாளா்   திருமதி சமந்தி நாகத்தென்ன தெரிவித்தாா் 

 திகன நகரத்தில்  ரஜவெலவில் உள்ள  மஜ்ஜிதுல் நுாா்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (13) நல்லிணக்க கூட்டமொன்றினை மெனிக்கேன்ன பிரதேசய செயலாளா் தலைமையில்  இக் கூட்டம்  நடைபெற்றது.  இக் கூட்டத்திலேயே பிரதேச செயலாளா் இத் தகவலை தெரிவித்தாா்.  

இக் கூட்டத்தில் திகன வாழ் பள்ளிவாசல் தலைவா்கள், பிரதேச  பௌத்த குருமாா்கள், முஸ்லீம் மீடிய போரத்தின் தலைவா் என்.எம். அமீன், மெனிக்கேன்ன, குண்டகசாலை திகன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்  மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.  

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளா் -

அவசர அரச உதிவியாக    முதற் கட்டமாக  வீடுகளுக்கு 50 ஆயிரம்  ருபாவும்  முற்றாக நஸ்டமடைந்த சொத்துக்களுக்கு  1 இலட்சம் ருபா  நஸ்ட ஈடாகவும்   அரசாங்கம் வழங்க  நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆனால் தங்களது ஒரு கடை அல்லது  வீடுகளில் முன் வாயலில்  போடப்பட்டுள்ள ஒரு கதவு யன்னலுக்கே இந்த அரசாங்கம் வழங்கும் நஷ்ட ஈடாகது.  எனக்  கூறினாா்

2 comments:

  1. இந்த சம்பவத்தின் அழிவு செய்யப்பட்ட அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்தின் செலவுலே மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும் அப்போது தான் வரிப்பணத்தை செலுத்தும் எல்லா மக்களும் அதன் சுமையை அறிவார்கள்.

    ReplyDelete
  2. kalavaraththin karthakkalaik konde seyvikka vendum...

    ReplyDelete

Powered by Blogger.