Header Ads



762 மில்லியன் செலவில், சிலாபம் வைத்தியசாலையில் அபிவிருத்தி திட்டங்கள்


சிலாபம் பொது வைத்தியசாலையின் 11 அபிவருத்தி வேளைத்திட்டங்களுக்கான அடிக்கல் நடல் நிகழ்வு மற்றும் திறந்து வைத்தல் என்பன சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இன்று (17) இடம்பெற்றது.

ரூபாய் மில்லின் 762 செலவில் அமைக்கப்படும் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு , ஐந்து மாடிக் கட்டிட வாட்டுத் தொகுதிக்கான அடிக்கல் நடல் என்பன ஆரம்பமாக இடம்பெற்றது.

E-Health வேளைத்திட்டம், புற்று நோய் சிகிச்சைப் பிரிவு, இரத்தப் பரிசோசனை பிரிவு, வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலை மற்றும் வைத்தியசாலை கழிவுகள் சுத்திகரிப்பு செய்தல் போன்ற அபிவிருத்தி வேளைத்திட்டஙகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

அத்தோடு 'சீடி ஸ்கேனர்' இயந்திரம் ஒன்றும் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் மற்றும் வைத்திய ஆலோசகர்கள், வைத்தியசாலை ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.