Header Ads



ஜெனீவாவில் 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர்.

கடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில், 177 பரிந்துரைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். தாமாக முன்வந்து 12 வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிததார்.

எஞ்சிய 53 பரிந்துரைகளையும் தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

No comments

Powered by Blogger.