Header Ads



4 ஆம் திகதிக்கு முன், ரணில் பதவி விலக வேண்டும், முஸ்லிம் கட்சிகளுக்கு சிலர் தவறான கருத்தை முன்வைக்கின்றனர்

தேசிய அரசாங்கம் மற்றும் தனது கட்சி ஆகியவற்றை பாதுகாக்கும் தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்குமாயின் அவர் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் செயற்பட முடியாது.

இலங்கை மத்திய வங்கியை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையானது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கிடைத்த ஆசிர்வாதமாகும்.

பிரதமர் பதவி விலகுவதால், தேசிய அரசாங்கம் இல்லாமல் போகாது. புதிதாக நியமிக்கப்படும் பிரதமருடன் தேசிய அரசாங்கம் குறித்து தீர்மானிக்கப்படும்.

புதிய பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை சேர்ந்தவராகவோ, ரதன தேரர் , மருத்துவர் அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவராக இருக்கலாம்.

தேசிய அரசாங்கத்தை உடைக்கவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு சிலர் தவறான கருத்தை முன்வைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது முற்றிலும் பொய்யானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு கூறும் பிரதமரின் அணியினரே தேசிய அரசாங்கத்தை இல்லாமல் செய்யப் போகின்றனர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.

    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. Where were you from 2012 when all this problem started? Muslim voice mean which area you represents .can you please arrange 100 people for a meeting to discuss muslim issues

    ReplyDelete

Powered by Blogger.