Header Ads



கண்டி வன்முறை - 3 நீதியரசர்களைக் கொண்ட குழு நியமனம்

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்துள்ளார்.

அந்த வகையில் ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளது.

இந்த கலவர சூழ்நிலைக்கு காரணமான விடயங்களுக்கு மத்தியில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளதா என்றும், உயிர் உடைமை சேத விபரங்கள் குறித்தும், இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயற்பட்ட விதம், அவர்களது வகைகூறல் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.03.10

4 comments:

  1. அதிமேதகு ஜனாதிபதி அவைகளே, இந்த ஆட்சியில சலசலப்புத்தான் பணியாரம் இல்ல

    ReplyDelete
  2. if you punish them immediately thous who involve in this violence it should be a lesson to others

    ReplyDelete
  3. இது தான் காலா காலம் முஸ்லிம்களுக்கும், ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் சொல்லப்படும் ஆறுதல், முஸ்லிம்களே எங்களுக்காக பரிந்து பேசும் அந்நிய சமூகத்தவர்களை ஓகோ என்று புகழ்வதையும், நம்பி ஏமாறுவதையும் எப்போது தவிர்த்து.,
    நாம்,நமது சமூகம் என்று, இயக்க வெறி இன்றி, ஒன்று பட்டு எதிரியை இனம் கனுவோமோ அன்றைய தினம் தான் எமது விடிவை நாம் கண்டு கொண்டோம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. My3 has a world record of appointing commissions to investigate the issues but no results.

    ReplyDelete

Powered by Blogger.